For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் சக்திவாய்ந்த அம்மாக்கள் பட்டியலில் ஹிலாரி, சோனியா, இந்திரா நூயி

By Mathi
Google Oneindia Tamil News

Hillary clinton, Indra Nooyi and Sonia gandhi
நியூயார்க்: இப்படியெல்லாம்கூட தரவரிசை உண்டா என கேட்காதீர்கள்! இன்று அன்னையர் தினம் அல்லவா! அதான் உலகின் சக்திவாய்ந்த 20 அம்மாக்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது.

அன்னையர் தினத்தை முன்னிட்டு போர்ப்ஸ் பத்திரிகை அம்மா ஸ்பெஷல் ஒன்றை வெளியிட முடிவு செய்தது! அரசியல், தொழில்துறை, கலைத்துறை என பலதுறைகளிலும் இருக்கும் அம்மாக்களை ஆராய்ந்து 20 சக்தி வாய்ந்த அம்மாக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

64 வயதான அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரிக்கு முதலிடம், 64 வயதான பிரேசில் அதிபர் தில்மா ரூசெப்க்கு 2-வது இடம் கிடைத்திருக்கிறது.

பெப்ஸி நிறுவன தலைவராக உள்ள 56வயது இந்திரா நூயிக்கு 3 வது இடம் கிடைத்திருக்கிறது. நம்ம காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுக்கு 6 வது இடம், ஒபாமாவின் மனைவி மிச்செல்லுக்கு 7வது இடம், மியான்மரின் ஆங்சான் சூயிக்கு 20வது இடம் வழங்கியிருக்கிறது போர்ப்ஸ்.

English summary
US Secretary of State Hillary Clinton has been named No 1 in the World's 20 Most Powerful Moms list which also ranked India-born Indra Nooyi at the 3rd spot and UPA chairperson Sonia Gandhi at No 6.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X