For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளம் அணு உலையைக் கைவிட வலியுறுத்தி லண்டனில் போராட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

Kudankulam Nuclear Powerplant
லண்டன்: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

கூடங்குளம் அணு உலைக்கு அந்தப் பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் மட்டுமின்றி இந்திய அளவில் அணு உலை எதிர்ப்பாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் போராட்டம் நடத்தினர் .ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அணு உலை எதிர்ப்பாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள், "இனி ஒரு செர்னோபில் வேண்டாம்" :"இனி ஒரு புகுஷிமா வேண்டாம்" ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இருந்தனர். மேலும் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி மனு ஒன்றையும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் கொடுத்தனர்.

முன்னதாக இங்கிலாந்து நாட்டின் எம்.பி.க்கள் குழு ஒன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Carrying placards that read, “No More Chernobyls! No More Fukushimas!,” activists representing a coalition of anti-nuclear and human rights groups held a protest outside the Indian High Commission here on Friday, demanding a halt to the Kudankulam Nuclear Power Project (KKNPP) and withdrawal of police and court cases against anti-KKNPP protesters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X