For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேரு வந்தபோது பாத்ரூமுக்குள் ஓடி ஒளிந்த ராஜீவ் காந்தி!

Google Oneindia Tamil News

Rajiv Gandhi
டெல்லி: மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு தனது பேரனான ராஜீவ் காந்தியைப் பார்க்க அவர் படித்த பள்ளிக்கு வந்தபோது ராஜீவ் காந்தி, ஒரு பாத்ரூமுக்குள் ஓடி ஒளிந்து கொண்டாராம். இதை மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ராஜீவ் படித்த டேராடூன், டூன் பள்ளியின் முதல்வராக இருந்த ஜான் மார்ட்டினின் மனைவி மேடி மார்ட்டின் எழுதியுள்ள நூலில் இந்த சம்பவம் குறித்துப் படித்தாராம் அய்யர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், டேராடூனில் உள்ள டூன் பள்ளியில் ராஜீவ் படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு வயது 11. அப்போது அவரது தாத்தாவான ஜவாஹர்லால் நேரு அவரைப் பார்க்க பள்ளிக்கு வந்திருக்கிறார். அப்போது எங்கு தேடியும் ராஜீவைக் காணவில்லை. எல்லோரும் பதற்றமாக, குளியலறையில் இருந்த ஒரு கூடையில் அவர் ஒளிந்திருந்தது கடைசியில்தான் தெரியவந்ததாம். டூன் பள்ளியின் தலைமையாசிரியராக இருந்த ஜான் மார்ட்டினின் மனைவி மேடி மார்ட்டின் எழுதிய புத்தகத்தில் இந்தச் சம்பவம் பற்றி நான் படித்தேன்.

1985-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, நான் அவரது இணைச் செயலாளராகப் பணியாற்றினேன். டூன் பள்ளியின் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அவருடன் நானும் டேராடூனுக்குச் சென்றேன். அப்போது கிடைத்த புத்தகத்தை விமானத்தில் படித்தேன்.

கூச்ச சுபாவம் காரணமாக குளியலறைக்குள் ராஜீவ் ஒளிந்திருந்தார் என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ராஜீவிடம் இதுபற்றிக் கேட்டபோது, அந்தச் சம்பவம் நடந்தது உண்மைதான்; எனினும் ஒளிந்து கொண்டதற்கான காரணம் வேறு என்று அவர் கூறினார் என்று அய்யர் கூறியுள்ளார்.

ஏன் ஓடி ஒளிந்தார் என்பது குறித்து ராஜீவ் விளக்குகையில், நேருவை சந்திக்கப் பயந்தோ அல்லது அரசியலிலிருந்து தூரமாக இருக்கவோ நான் ஓடி ஒளியவில்லை. நான் எப்போதெல்லாம் நேருவுக்கு சாதகமாக எனது நண்பர்களிடம் பேசினாலும், அவர்கள் நான் நேருவை ஆதரித்தே பேசுவதாக கூறுவார்கள் என்று கூறினார் என்றார் அய்யர்.

ராஜீவ் குறித்து மேலும் அய்யர் கூறுகையில், 1984ம் ஆண்டு பிரதமராக ராஜீவ் வந்துபோது அவர் அதற்கு உண்மையிலேயே தயார் நிலையில் இல்லை. 40 வயதான ஒருவர் பிரதமரானபோது அனைவருமே அவரை குறைத்தே மதிப்பிட்டனர். ஆனால், தனது சிந்தனை மற்றும் செயலாற்றல் மூலம் அதை தவிடுபொடியாக்கினார் ராஜீவ் என்றார் அய்யர்.

English summary
11-year-old Rajiv Gandhi had tried to hide in a basket inside the bathroom when his grandfather Pandit Jawaharlal Nehru had gone to meet him at Doon school, Congress leader Mani Shankar Aiyar said. "I had read about it in a book written by Maddy Martin, wife of the Doon school headmaster John Martin and Rajiv also later confirmed it," the Rajya Sabha MP said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X