For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறையிலிருந்து விடுதலையானார் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா

By Mathi
Google Oneindia Tamil News

Sarath Fonseka
கொழும்பு: இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா நேற்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின்போது ராணுவத்தில் இருந்து தப்பி ஓடியோருக்கு அடைக்கலம் கொடுத்தது மற்றும் வெள்ளைக் கொடி ஏந்தி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களை படுகொலை செய்தது உள்ளிட்ட வழக்குகளின் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

ராணுவத்தில் இருந்து தப்பியோடியருக்கான வழக்கில் ஜாமீன் கிடைத்தது. வெள்ளைக் கொடி வழக்கில் அவரை விடுதலை செய்ய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கபப்ட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த பொன்சேகா ஆதரவாளர்களிடம் அவர் பேசியதாவது:

எனக்காக மக்கள் சிந்திய கண்ணீரை நான் ஒருபோதும் மறந்துவிட மாட்டேன். எனக்கு நேர்ந்த அசாதாரணத்துக்காக மக்கள் பட்ட வேதனையையும் மறந்துவிட மாட்டேன்.

இன்று முதல் மக்களுக்கான எனது பணி மீண்டும் தொடரப்போகிறது. எமது மக்களுக்காக என்னை நான் தியாகம் செ ்வேன். மக்கள் எனக்கு மிகப் பெரும் சக்தியை வழங்கியுள்ளனர் என்றார் அவர்.

நாடாளுமன்றம் போக முடியாது

இதனிடையே இலங்கையின் அரசியலமைப்பின் படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்கள் ஏழு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவோ அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடவோ முடியாது. பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது சரத் பொன்சேகாவின் சிறைவாசம் அனுபவிக்கும் காலத்தை மட்டுமே குறைத்துள்ளது என்கின்றனர் இலங்கை அரசு அதிகாரிகள்.

இதனால் சரத்பொன்சேகா நாடாளுமன்றத்துக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எப்போது பொன்சேகாவின் சிறைத் தண்டனை குறைக்கப்படுகிறோ அப்போதுதான் அவர் அரசியலில் ஈடுபட முடியும் என்றும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Sri Lanka's war hero Sarath Fonseka today walked free from prison a defiant man, after spending two years behind bars for crossing swords with the country's powerful President and dabbling into politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X