For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இறுதிப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவது முட்டாள்தனமாது: பொன்சேகா

By Mathi
Google Oneindia Tamil News

Sarath Fonseka
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் குற்றம்சாட்டுவது முட்டாள்தனமானது என்று இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொன்சேகா விடுதலையான பிறகு தமது விட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, இறுதிப் போரின் போது அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படவில்லை. போர்க் குற்றம் தொடர்பான எந்த ஒரு கேள்விக்கும் சந்தேகத்துக்கும் பதிலளிக்க தாம் தயாராக இருக்கிறேன் என்றார்.

மேலும் ஐ.நா. உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகள் இறுதிப் போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது பற்றிய கேள்விக்கு, அதை நான் ஏற்க முடியாது. அப்படிச் சொல்வது முட்டாள்தனமானது என்றார். தமது விடுதலைக்கு நெருக்கடி கொடுத்த சர்வதேச நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பொன்சேகா கூறியுள்ளார்.

English summary
Former Sri Lankan army chief Sarath Fonseka, who led his troops to victory over the LTTE three years ago, today denied accusations that war crimes had been committed in the final battle. "If we fight shy in answering these questions then they may think we are guilty" Fonseka said dismissing allegations by international agencies including UN that 40,000 civilians had been killed. "I don't agree with that, that is nonsense", he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X