For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடற்படை தலைமையகத்தை பார்வையிட் பிரதீபா வந்ததற்கான செலவு ரூ. 23 கோடி!

Google Oneindia Tamil News

Prathiba Patil
டெல்லி: மேற்கு கமாண்ட், கடற்படை தலைமையகத்தை ஆய்வு செய்ய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வந்தபோது ரூ. 23 கோடி செலவிடப்பட்டதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி அதாவது சுப்ரீம் கமாண்ட் ஆக இருப்பவர் குடியரசுத் தலைவர். கடந்த 2011ம் ஆண்டு மேற்கு கமாண்ட் கடற்படை தலைமை அலுவலகத்திற்கு ஆய்வுக்காக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வருகை தந்தார். இந்த நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய அளவில் செலவு செய்துள்ளது கடற்படை. கிட்டத்தட்ட 900க்கும் மேற்பட்ட விருந்தினர்களை வரவழைத்து ஆடம்பரமாக செலவிட்டுள்ளது. மொத்தச் செலவு ரூ. 23.24 கோடியாகும்.

எஸ்.சி.அகர்வால் என்ற பொது நல சேவகர் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இந்த விவரத்தைப் பெற்று வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட தொகையின் விவரம் வருமாறு...

குடிநீருக்காக ரூ. 12 லட்சம்

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் ஒன்றாக குடிநீர் வசதிக்காக ரூ. 12 லட்சம் பணத்தை செலவிட்டுள்ளனர். அதாவது, நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட ஒவ்வொரு கெஸ்ட்டுக்கும், தலா 83 ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில்களை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

ரூ. 17 லட்சம் பணம், குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளுக்காக செலவிடப்பட்டுள்ளது.

படிக்கட்டுக்களை சீரமைக்க ரூ. 14 லட்சம்

கமாண்ட் அலுவலகம் அருகே உள்ள ஒரு கால்நடைப் பண்ணையின் வேலிகைளை சீரமைக்க ரூ. 14 லட்சத்தையும், படிக்கட்டுக்களை சீரமைக்க ரூ. 14 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.

டைனிங் டேபிள் வாங்க ரூ. 26 லட்சம்

30 டைனிங் டேபிள்கள், 60 டைனிங் சேர்களை மற்றும் விஐபி சேர்கள், பிற மரச் சாமான்களை வாங்க ரூ. 26.96 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

960 விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கவனிக்க ஆன செலவு மட்டும் ரூ. 17.57 லட்சமாகும்.

மளிகை சாமான் வாங்க ரூ. 28.14 லட்சம்

சாப்பாட்டுக்குத் தேவையான மளிகை சாமான்களை வாங்க ரூ. 28.14 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கான கூலி ரூ. 1 கோடி

பல்வேறு பணிகளுக்கு அமர்த்தப்பட்ட ஆட்களுக்கு சம்பளமாக மட்டும் ரூ. 1 கோடி தரப்பட்டுள்ளது.

விழா நடந்த முல்லா ஆடிட்டோரியத்தில் செயற்கை நீரூற்று ஒன்றை ரூ. 6 லட்சம் செலவில் அமைத்துள்ளனர். அடிப்படைக் கட்டமைப்புக்காக மட்டும் ரூ. 11.67 கோடி செலவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி ஒரே ஒரு நாள் நடந்த நிகழ்ச்சிக்குத்தான் இவ்வளவு செலவு செய்துள்ளதாம் கடற்படை.

English summary
The Navy has run up a tab of Rs 23 crore for a day's extravaganza for the President. This included a bill of Rs 12 lakh for drinking water and Rs 17 lakh for the presidential banquet, besides spending Rs 14 lakh on alteration of a cattle fence and a similar amount on fixing a staircase.
 The President's Fleet Review of the Navy, in which the supreme commander of the armed forces inspects the maritime prowess of the force, took place in 2011 and is held once in the President's tenure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X