For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல் விலை உயர்வு எதிரொலி: அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்த திமுக, மம்தா

By Chakra
Google Oneindia Tamil News

Cabinet Meeting
டெல்லி: வரலாறு காணாத கடும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக கோபமடைந்துள்ள திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கூட்டணிக் கட்சிகள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணித்தன.

பிரதமரின் இல்லத்தில் நடந்த இக் கூட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா மட்டுமே பங்கேற்றார்.

அமைச்சரவைக் கூட்டம் நடந்தபோது பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மேற்குவங்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் முகுல்ராய் பங்கேற்றார்.

திமுக அமைச்சர் அழகிரியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வெளிநாடு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

தங்களிடம் ஆலோசிக்காமல் பெட்ரோல் விலையை உயர்த்தியதாக திமுக, மம்தா, சரத்பவார் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

English summary
A day after the steepest hike of Rs 7.50 per litre in petrol prices, the Central government on Thursday came under immense pressure for at least a partial rollback from opposition as well as key allies such as DMK, Trinamool and NCP, and even Congress. Angry over the move, the Trinamool Congress, the Nationalist Congress Party (NCP) and the DMK on Thursday skipped an important Cabinet meet held at Prime Minister Manmohan Singh's residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X