For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகசூல் இல்லை: வெங்காயம் விலை விர்- ஜூலை வரை விலை குறையாது

Google Oneindia Tamil News

Onion
நெல்லை: மகசூல் இல்லாததால் நெல்லையில் வெங்காயம் கிலோ ரூ.33க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் பாவூர்சத்திரம், ஆலங்குளம், தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் வெங்காயம் விளைகிறது. விளாத்திகுளத்தில் கடந்த ஒரு மாதத்தி்ற்கு முன்பு தான் வெங்காயம் மகசூல் முடிந்தது. பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் தற்போது பயிரிடப்பட்டு வருகிறது, விளாத்திகுளம் பகுதியில் கூடுதல் மகசூல் காரணமாக கடந்த மாதம் வரை வெங்காயம் விலை கடும் வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.10க்கு விற்கப்பட்டது.

தற்போது நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் மகசூல் இல்லாததால் திண்டுக்கல், ஆத்தூர் பகுதிகளில் இருந்து வெங்காயம் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பாவூர்சத்திரத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.28ல் இருந்து 30 வரையும், நெல்லையில் ரூ.33 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. பாவூர்சத்திரம் பகுதியில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தான் வெங்காயம் மகசூல் நடைபெறும். அது வரை விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

English summary
Onion price has increased as the production decreases. A kilogram of onion costs Rs.30-33. Merchants told that the prices won't come down till july and august.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X