For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடைத்தேர்தலில் சூறாவளி பிரச்சாரம்- காங்கிரஸுக்கு அழிவு காத்திருக்கிறது: ஜெகன் அம்மா ஆவேசம்

By Mathi
Google Oneindia Tamil News

Vijayalakshmi
ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை திட்டமிட்டு சிறையில் அடைத்திருக்கும் நிலையில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிட்டு இடைத்தேர்தலுக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாக ஜெகனின் தாயார் விஜயலட்சுமி அறிவித்திருக்கிறார்.

ஜெகன் கைதான நாளில் அம்மா விஜயலட்சுமி, ஜெகனின் மனைவி பாரதி உள்ளிட்டோர் சி.பி.ஐ. அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர் ஜெகனின் தாயார் வீட்டில் இருந்தபடியே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார். ஆனால் கட்சி நிர்வாகிகள் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக ஜெகனின் அம்மா விஜயலட்சுமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆந்திராவில் 18 சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் ஒரு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு ஜூன் 12-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜெகனிடம் இத்தனை நாளாக விசாரணை நடத்தாமல் தேர்தல் நேரத்தில் விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர்.

ஜெகனை ஒழித்துக் கட்ட ஆளும் காங்கிரஸ் கட்சி சதி செய்கிறது. ஆனால் எங்கள் கட்சிதான் வரும் இடைத்தேர்தலில் திருப்புமுனையை உருவாக்கப் போகிறது.

ஜெகனை விடுதலை செய்யக் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தேன். ஆனால் ஜெகனை சிறையில் தள்ளியிருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியிருப்பதை கட்சி நிர்வாகிகள் சுட்டிக்காட்டினர். இதற்காகவே உண்ணாவிரதத்தை திரும்பப் பெற்றேன்.

18 பேரவை தொகுதிகளிலும் நெல்லூர் மக்களவைத் தொகுதியிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப் போகிறேன். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. எங்களை அழிக்க நினைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் சரியான பாகம் புட்டியே தீருவர் என்றார் அவர்.

English summary
Kadapa MP Y.S. Jagan Mohan Reddy’s mother, Ms Vijayalakshmi, withdrew her fast on Monday evening following repeated appeal by party leaders and decided to start campaigning for next month’s byelections from May 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X