For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராணுவ வாகன கொள்முதல் விவகாரம்: வி.கே.சிங்குக்கு பி.இ.எம்.எல். நிறுவனம் நோட்டீஸ்

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூர்: ராணுவத்துக்கு டட்ரா ரக வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பாக தொடர்ந்தும் பொய்யான தவறான தகவல்களை உள்நோக்கத்துடன் கூறி வருவதாகவும் அதனால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்குக்கு பாரத் இர்த் மூவார்ஸ் நிறுவனம் (பி.இ.எம்.எல்.) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராணுவத்துக்கு 600 டட்ரா ரக வாகனங்களை வாங்குவதற்காக தமக்கு ரூ14 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்தனர் என்றும் டட்ரா வாகனங்கள் தரம் குறைந்தவை என்றும் ஓய்வு பெற்றுள்ள முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.விசாரணை நடத்தி வரும் நிலையில் மீண்டும் வி.கே.சிங் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பி.இ.எம்.எல். நிறுவன தலைவர் நடராஜன், டட்ரா வாகன கொள்முதல் விவகாரத்தில் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் மன்னிப்பு கோராவிட்டால் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்துள்ளார். ஏற்கெனவே வி.கே.சிங்கின் குற்றச்சாட்டுகளை தாம் மறுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

English summary
A day after Gen V K Singh retired as Chief of Army, public sector BEML today slapped a legal notice on him demanding an apology for his ''false and motivated'' allegations against it on the Tatra truck issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X