For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெகன்மோகன் ரெட்டியிடம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்துகிறது சிபிஐ

By Mathi
|

ஹைதராபாத்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 5நாள் சி.பி.ஐ காவலில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆந்திர முதல்வராக ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இருந்தபோது அமைச்சர்கள் துணையோடு அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்பது சிபிஐன் புகார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டியை 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கவும் ஆந்திர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இன்று முதல் 5 நாட்களுக்கு ஜெகனிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

முதல் நாளான இன்று ஜெகனின் சொத்து விவரங்கள் குறித்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகள் பற்றி அதிகம் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.

English summary
The Central Bureau of Investigation (CBI) Sunday began questioning jailed YSR Congress Party leader Y.S. Jaganmohan Reddy in the illegal assets case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X