For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செஸ் சாம்பியன் ஆனந்த்துக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகை வழங்கினார் ஜெ.

Google Oneindia Tamil News

CM Jayalalitha hands over a cash reward of Rs.Two crores to Viswanathan Anand
சென்னை: உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இன்று தலைமை செயலகத்திற்கு வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்துகளை பெற்று கொண்டார். அப்போது தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.2 கோடி பரிசுத் தொகையை முதல்வர் ஜெயலலிதா, விஸ்வநாதன் ஆனந்த்திற்கு அளித்தார்.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய செஸ் வீரரான விஸ்வநாதன், இஸ்ரேல் வீரர் போரிஸ் ஜெல்பாண்டை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

5வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் விஸ்வநாதன் ஆனந்த்திற்கு இந்திய அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என்று பலத்தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த்தின் சாதனையை பாராட்டி, தமிழக அரசு தரப்பில் ரூ.2 கோடி பரிசுத் தொகை வழங்குவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். உலக சாம்பியன் பட்டம் வென்றதற்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு விஸ்வநாதன் ஆனந்த் நேற்று நாடு திரும்பினார்.

இன்று சென்னையில் உள்ள தலைமையகத்திற்கு சென்ற விஸ்வநாதன் ஆனந்த், முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது விஸ்வநாதன் ஆனந்த்தின் திறமையை பாராட்டிய முதல்வர், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.

அப்போது மாநிலத்தில் செஸ் விளையாட்டை மேம்படுத்த தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக விஸ்வநாதன் ஆனந்த் உறுதி அளித்தார். சந்திப்பின் முடிவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.2 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையை, விஸ்வநாதன் ஆனந்த்திற்கு வழங்கி பாராட்டினார். இந்த சந்திப்பின் போது விஸ்வநாதன் ஆனந்த்தின் மனைவி அருணாவும் உடன் இருந்தார்.

English summary
TN chief minister J.Jayalalithaa today presented a cheque of Rs.2 crore to 5 time world chess champion Viswanathan Anand in Chennai. Ms.Jayalalithaa also spoke to him about introducing chess in schools.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X