For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நித்தியானந்தா ஓடிப் போனதால் ஏமாற்றம்... மடத்தைக் காலி செய்யும் ஆதரவாளர்கள்

Google Oneindia Tamil News

Nithyanantha
பெங்களூர்: நித்தியானந்தா தலைமறைவாகி ஓடிப் போய் விட்டதால், பிடதி ஆசிரமத்தில் இதுநாள் வரை தங்கியிருந்த ஆண்களும், பெண்களும் மடத்தைக் காலி செய்து வருகின்றனர். இன்று மடத்திற்கு சீல் வைக்கவுள்ளனர் போலீஸார்.

நித்தியானந்தாவைப் பிடிக்க வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு விட்டது. ஆசிரமத்தைப் பூட்டி சீல் வைக்கவும், சோதனை நடத்தவும், ஆதாரங்களைக் கைப்பற்றவும் கர்நாடக முதல்வர் கெளடா உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், நித்தியானந்தாவும் தலைமறைவாகி ஓடி விட்டார். இதனால் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஆண்களும், பெண்களும் மூட்டை முடிச்சுகளுடன் மடத்தைக் காலி செய்து வருகின்றனர்.

அனைவரும் இடத்தைக் காலி செய்த பின்னர் மடத்தை அதிகாரிகள் மூடி சீல் வைப்பார்கள் என்று தெரிகிறது. அதற்கு முன்பாக நித்தியானந்தா மீதான புகார்கள் தொடர்பான ஆதாரங்களை போலீஸார் கைப்பற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள நித்தியானந்தா மடத்தில் தங்கியிருந்த ஆர்த்தி ராவ் என்ற நித்தியானந்தாவின் பக்தையை அவர் பாலியல் ரீதியாக சீரழித்ததாக நித்தியானந்தா மீது லேட்டஸ்டாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கேள்வி கேட்கப் போய்த்தான் கன்னட சுவர்ணா டிவி சேனல் செய்தியாளரை நித்தியானந்தா ஆதரவாளர்கள் தாக்கிஅடித்து விரட்டினர் என்பது நினைவிருக்கலாம்.

English summary
Nithyanantha supporters are vacating Bidadi ashram after Karnataka govt ordered to seal the premise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X