For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்-மக்கள் ஓட்டம்

Google Oneindia Tamil News

ஹாங்காங்: பிலிப்பைன்ஸின் தென் மேற்கே கடலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் பீதியடைந்து ஓடினர்.

பிலிப்பைன்ஸுக்குச் சொந்தமான லூஸான் தீவுக்கு அருகே கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அளவு 6.1 ரிக்டர் என்று அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி அதிகாலை 3.49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பகுயோ நகருக்கு தென் மேற்கே 143 கிலோமீட்டர் தொலைவிலும், தலைநகர் மணிலாவுக்கு வட மேற்கே 181 கிலோமீட்டர் தொலைவிலும் இதன் மையம் இருந்தது.

நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. சாலைகளில் பெரிய வெடிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டும், கட்டடங்களை விட்டும் ஓடி வந்தனர். உயிரிழப்பு குறித்த தகவல் இதுவரை இல்லை.

English summary
A 6.1-magnitude earthquake jolted the sea area off the Philippine island of Luzon early today, US seismologists said. The US Geological Survey said the quake had a depth of 35 kilometres and hit at 6:19 am (03:49 IST) some 143 kilometres southwest of the city of Baguio and 181 kilometres northwest of the capital Manila.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X