For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நித்தியானந்தாவை மாட்டி விட்ட லெனின் கருப்பனுக்கு ஜாமீன்!

Google Oneindia Tamil News

சென்னை: நித்தியானந்தா, நடிகை ஒருவருடன் இருந்தது போன்ற வீடியோ காட்சிகளை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவரும், நித்தியானந்தாவின் முன்னாள் ஆதரவாளருமான லெனின் கருப்பனுக்கு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து அவர் 109 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுதலையாகியுள்ளார்.

நித்தியானந்தாவிடம் ஆதரவாளராக இருந்தவர் லெனின் கருப்பன். பிடதி ஆசிரமத்தில்தான் இவரும் இருந்தார். இவர்தான் நித்தியானந்தா அறையில் வீடியோ கேமராவை வைத்து ரகசியமாக படம் பிடித்து வெளியிட்டு பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியவர்.

இவர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக நித்தியானந்தா கடந்த ஆண்டு சென்னை போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அதுதொடர்பாக அவரை சிபிசிஐடி போலீஸார் தேடி வந்தனர். பின்னர் லெனின் கருப்பனைப் பிடித்த போலீஸார் விசாரணைக்குப் பின்னர் கைது செய்து சிறையில் தள்ளி விட்டனர்.

கடந்த 109 நாட்களாக சிறையில் அடைபட்டிருந்த லெனின் கருப்பனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் விடுதலையாகியுள்ளார்.

நித்தியானந்தா தன் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுக்களையும், புகார்களையும் சட்ட ரீதியாக சந்திக்கப் போவதாக கூறியுள்ளார் லெனின் கருப்பன்.

English summary
Nithyanantha's former aide Lenin Karuppan has been released on bail. He was lodged in Chennai Puzhal prison for the last 109 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X