For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்போனில் பேசியபடி ஓட்டியதாலும், டிரைவர் சீட் கழன்று விழுந்ததாலும் விபத்து?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அண்ணா மேம்பாலத்திலிருந்து நகரப் பேருந்து கவிழ்ந்து விழுந்த சம்பவத்தால் அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. பஸ்சின் டிரைவர் செல்போன் பேசியபடி ஓட்டியதாகவும், அப்போது திடீரென அவரது சீட் கழன்று விழுந்ததாலும் விபத்து நேரிட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

சென்னை பிராட்வேயிலிருந்து வடபழனி நோக்கி 17எம் பஸ் சென்று கொண்டிருந்தது. அண்ணா சாலையிலிருந்து மேம்பாலத்தில் ஏறிய பேருந்து வடபழனிக்கு செல்ல ஜிஎன் செட்டி சாலைக்கு போக வேண்டும். அதற்காக பேருந்து திரும்பியபோதுதான் விபத்து ஏற்பட்டு விட்டது.

இதுகுறித்து எதிர்திசையில் வந்த பேருந்தில் பயணித்த பயணிகள் திகிலுடன் கூறிய தகவல்கள்....

விபத்தில் சிக்கிய பேருந்தின் டிரைவர் செல்போனில் பேசியபடி பஸ்ஸைச் திருப்பியதை நாங்கள் பார்த்தோம். காதில் செல்போனை வைத்திருந்தார், கை ஸ்டிரியங்கை திருப்பிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் சீட் கழன்று கொண்டது. இதனால்டிரைவர் நிலை தடுமாறினார். அவரால் வேகமாக திரும்பிய வண்டியை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பேருந்து தடுப்புச் சுவற்றின் மீது மோதி கீழே விழுந்தது என்று கூறியுள்ளனர்.

விபத்தில் டிரைவரும் படுகாயமடைந்துள்ளார். அவரிடமும், பேருந்தில் பயணித்தவர்களிடமும் விசாரணை நடத்தும்போதுதான் உண்மை என்ன என்று தெரிய வரும்.

English summary
Passengers of another bus have told that the ill fated bus which fell from Anna flyover, met the accident due to the driver's carelessness. They said that the driver was speaking in his mobile while turning the bus towards GN Chetty road.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X