For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடந்த நிதி ஆண்டில் தொலைத் தொடர்புத் துறை சாதனங்களின் விற்பனை ரூ1.13 லட்சம் கோடி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தொலைத் தொடர்பு சாதனங்கள் விற்பனை கடந்த நிதி ஆண்டில் ரூ.1.13 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய நிதி ஆண்டில் இது ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்ததால் விற்பனை 0.83 விழுக்காடு குறைந்துள்ளது.

2010-ஆம் ஆண்டில் அகண்ட அலைவரிசை ஒதுக்கீடுகளுக்காக தொலைத் தொடர்புத் துறை நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ரூ.1.06 லட்சம் கோடி செலவிட்டிருந்தன. இதனால் தொலைத் தொடர்பு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் போதிய அளவில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதுதான் சென்ற நிதி ஆண்டில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் குறைவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

கடந்த நிதி ஆண்டில் பல புதிய பிராண்டு செல்போன்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. பெரும்பாலான செல்போன் கடைகளில் 12-15 பிராண்டுகளை மட்டுமே இருக்கின்றன.

செல்போன் விற்பனையில் நோக்கியா நிறுவனம் 38.2 விழுககாடு சந்தை பங்குடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அடுத்தபடியாக சாம்சங் 25.3 விழுக்காடு பங்கினை பெற்றுள்ளது. வருவாய் 7.77 சதவீதம் சரிவடைந்திருந்தாலும் நோக்கியா நிறுவனம் ரூ.11,925 கோடி ஈட்டி செல்போன் தயாரிப்பில் மிகப் பெரிய நிறுவனமாக உள்ளது. டாப்லெட் கம்ப்ïட்டர் சந்தையில் சாம்சங் நிறுவனம் 56.52 பங்குடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

English summary
Telecom equipment and product segment growth declined marginally in 2011-12 financial year at Rs 1,13,188 crore mainly due to policy uncertainty and low spending by operators in the backdrop of huge price paid by them for airwaves at auction held in 2010, says a study.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X