For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி வாக்குகளை வாங்குகிறார் பிரணாப்: பட்நாயக்

By Mathi
Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி, மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அதன் மூலம் வாக்குகளை திரட்டி வருகிறார் என்று ஒடிஷா முதல்வரும் பிஜூ ஜனதா தளத்தின் தலைவருமான நவீன் பட்நாயக் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியை சில மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்து அதன் மூலம் வாக்குகளைப் பெற்று வருகிறார். பீகார், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு நிதியாக ஒதுக்கியிருக்கிறது.

இத்தகைய நிதி ஒதுக்கீடானது குடியரசுத் தலைவர் தேர்தலில் தமக்கு அந்த மாநிலக் கட்சிகளின் வாக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். இப்படி நிதி ஒதுக்க இது ஒன்றும் தனி நபர் ஒருவரது பணம் அல்ல. மக்களின் பணம். குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இத்தகைய நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு மேற்கொண்டிருப்பது ஏன்? என்றா அவர்.

English summary
Odisha chief minister Naveen Patnaik has accused United Progressive Alliance (UPA) presidential candidate Pranab Mukherjee of buying support of parties by doling out large sums of money to selective states during his tenure as finance minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X