For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டீசன்ட்டா டிரஸ் பண்ணிட்டு வாங்க... ஆசிரியைகளுக்கு தமிழக அரசு திடீர் உத்தரவு!

Google Oneindia Tamil News

Teacher
கோவை: நமது கலாசசாரத்திற்கேற்பவும், பண்பாட்டுக்கு ஏற்பவும், நாகரீகமான முறையில் ஆசிரியைகள் உடை அணிய வேண்டும் என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரகம் திடீரென ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாம்.

பள்ளிகள் எல்லாம் திறந்து ஒரு மாதத்தைத் தாண்டியுள்ள நிலையில் இந்த உத்தரவு வந்திருப்பது ஆசிரியைகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 29ம் தேதி இந்த சுற்றறிக்கை போயுள்ளது. அதில், அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியைகள், ஆசிரியர்ள், வகுப்பறையில் நாகரீமான முறையில் உடையுடன் காணப்பட வேண்டும் என அறிவுறுத்துமாறு பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ளது.

நாகரீகமற்ற, நமது கலாச்சார, பண்பாட்டுக்குப் புறம்பான உடைகளை ஆசிரியர்கள், ஆசிரியைகள் அணியக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியைகள் மாணவியருக்கு நல்ல ரோல் மாடல்களாகத் திகழ வேண்டும். அப்போதுதான் மாணவியர்களும் ஆசிரியைகளைப் பின்பற்றி நடக்க முயற்சிப்பார்கள் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சில ஆசிரியைகள் சரியில்லாத உடைகளுடன் வகுப்பறைகளுக்கு வருவதாக புகார்கள் வருவது வருத்தம் தருகிறது என்று அந்த சுற்றறிக்கை மேலும் கூறுகிறது.

மாணவியரையும், மாணவர்களையும் பாதிக்கும் வகையிலான உடைகளை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அணியக் கூடாது. அது பொதுமக்கள் மத்தியிலும் தவறான கருத்துக்களை ஏற்படுத்த வழி வகுத்து விடும் என்றும் அந்த சுற்றறிக்கை தெரிவிக்கிறது.

இருப்பினும் இந்த சுற்றறிக்கையில் என்ன மாதிரியான உடைகளை ஆசிரியைகள் அணிய வேண்டும் என்பது குறித்து யோசனை தெரிவிக்கப்படவில்லை.

English summary
A month into the new academic year, the Tamil Nadu Directorate of School Education has advised teachers to turn up in classrooms wearing “dignified” dresses. In a circular dated June 29, the Directorate has asked District and Chief Educational Officers to instruct principals of government and all recognised private schools to ensure that teachers do not wear “indecent” attire against “our cultural ethos”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X