For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய ஆஸ்திரேலியா தயார்?!

By Chakra
Google Oneindia Tamil News

Uranium
நாம்பென் (கம்போடியா): இந்திய அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியத்தை வழங்குவது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலித்து வருவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பாப் கர் தெரிவித்துள்ளார்.

கம்போடிய தலைநகர் நாம்பென்னில் நடைபெறும் ஆசியான் அமைச்சர்கள் மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் அவர் இதைத் தெரிவித்தார்.

உலகில் மிக அதிக அளவில் யுரேனிய தாதுவைக் கொண்ட ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய முடியாது என்று கூறி வந்தது.
அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் (என்பிடி) இந்தியா கையெழுத்திடவில்லை. இதனால் இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய முடியாது என்று ஆஸ்திரேலியா கூறி வந்தது.

ஆனால், அமெரிக்காவுடன் அணு ஆயுத 123 ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட பிறகு ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் பிரதமர் ஜூலியா கிலார்ட், இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வதில் இருந்த தடைகளை விலக்கினார். ஆனால் அதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதையடுத்து இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளையை ஆஸ்திரேலியா தொடங்கவில்லை. இந் நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்கா மூலம் இந்தியா நெருக்கடி தந்தது.

இந் நிலையில் ஆஸ்திரேலியா தனது முடிவை மறுபரிசீலனை செய்யத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. இது குறித்து கிருஷ்ணாவிடம் பேசிய பாப் கர், இது தொடர்பாக சில கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டு அது அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்ப்படும். இதையடுத்து இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

உலகிலேயே மிக அதிக அளவில் யுரேனியம் தாது ஆஸ்திரேலியாவில் தான் உள்ளது. வேறெங்கும் இல்லாத அளவுக்கு மிகவும் தரம் வாய்ந்ததாகவும் அது உள்ளது. இதனால் ஆஸ்திரேலிய யுரேனியத்துக்கு உலக அளவில் பெரும் கிராக்கி நிலவுகிறது.

இப்போது ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்கா, சீனா, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளுக்கு யுரேனியம் ஏற்றுமதியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள்

இந்திய அணு உலைகள்- 'உலை வைக்கும்' ஜி-8!இந்திய அணு உலைகள்- 'உலை வைக்கும்' ஜி-8!

English summary
Months after reversing its policy of not selling uranium to India, Australia today said it was in the process of working out internal arrangements to ensure supply of the yellowcake to New Delhi. Australian Foreign Minister Bob Carr conveyed this to External Affairs Minister S M Krishna during their talks here in the Cambodian capital on the sidelines of the ASEAN Ministerial meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X