For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியரசுத் தலைவர் தேர்தல்: பால்தாக்கரேயுடன் பிரணாப் சந்திப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Pranab Mukherjee
மும்பை: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான பிரணாப் முகர்ஜி, சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரேவை நேற்று மும்பையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தபோதும் சிவசேனை கட்சியானது காங்கிரஸின் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்தது. குடியரசுத் தலைவர் தேர்தலில் தமக்கு ஆதரவு அளித்ததற்காக நேற்றைய சந்திப்பின் போது பால்தாக்கரேவுக்கு பிரணாப் நன்றி கூறினார்.

மும்பையில் உள்ள பால்தாக்கரேயின் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப், தமக்கு ஆதரவு தெரிவித்த பால்தாக்கரேவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன் என்றார்.

இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய பால்தாக்கரே, சங்மா எனது நண்பர்தான். ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் நட்பு அல்லது சாதி பார்க்கக் கூடாது என்றார்

இச்சந்திப்பின் போது மத்திய அமைச்சர் பால்தாக்கரே உடன் இருந்தார்.

English summary
UPA's presidential candidate Pranab Mukherjee on Friday night met Shiv Sena chief Bal Thackeray at latter's residence Matoshree' here, to thank him for the support in the election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X