For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை அருகே கோஷ்டி மோதலில் ஒருவர் கொலை: பதட்டம் நீடிப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை கக்கன் நகரில் வாலிபர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 2வது நாளாக பதற்றம் நீடிப்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை கக்கன் நகரைச் சேர்ந்த போல்வெல் தொழிலாளி ரமேஷ். நேற்று மாலை பைக்கில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது துரை என்பவரது தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதை தடுக்க முயன்ற ரமேஷின் சித்தப்பா கண்ணன், உறவினர்கள் முத்து, மகேஷ், மாரியப்பன் உள்ளி்ட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் ரமேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் கக்கன் நகரில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து துரை உள்ளிட்ட சிலரது வீடுகள் சூறையாடப்பட்டது. மேலும் 2 பைக்குகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. போலீஸ் கமிஷனர் கருணாசாகர், கூடுதல் துணை கமிஷனர் சேவியர், உதவி கமிஷனர் ஞானசேகரன், இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையி்ட்டனர்.

கொலை சம்பவம் தொடர்பாக கக்கன் நகர் 2வது தெருவைச் சேர்ந்த பொன்வேல்துரை, மாதவன், மகேஷ், முருகன், கனகராஜ், துரை, ராஜா, காந்தி தெருவைச் சேர்ந்த பழனி ஆகிய 8 பேரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் விசாரித்ததில் கொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ரமேஷுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் துரைக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஏற்கனவே இரு கோஷ்டியினரும் மோதலில் ஈடுபட்டு்ள்ளனர். இது குறித்து ரமேஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த துரை கோஷ்டியினர் கொலை முயற்சி சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சம்பவத்தால் கக்கன் நகரில் பதற்றம் நிலவுவதால் இன்று 2வது நாளாக போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

English summary
A youth was hacked to death in Tirunelveli on friday. Tension prevails there because of this incident. So, security has been tighterned there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X