For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாஹூவின் புதிய சிஇஒவாக முன்னாள் கூகுள் துணைத் தலைவர் மரிஸா மேயர் நியமனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Marissa Mayer
சன்னிவேல்: யாஹூ இணைய தளத்தின் முதன்மை செயல் அதிகாரியாக மரிஸா மேயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுநாள்வரை கூகுள் தேடுதளத்தின் துணைத்தலைவராக இருந்த அவர் இன்று முதல் யாஹூவின் சி.இ.ஒ வாக பணியை தொடங்குகிறார்.

1999ம் ஆண்டு கூகுளின் முதல் பெண் பொறியாளராக தனது பணியை தொடங்கிய மரிஸா ஐ கூகுள், கூகுள் நியூஸ், ஜி மெயில் போன்றவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். 6000க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களை வழி நடத்தினார். 13 ஆண்டுகாலம் கூகுளில் பணியாற்றியுள்ள மரிஸா அந்நிறுவனத்தில் துணைத்தலைவராக உயர்ந்தார்.

யாஹூவில் பணியாற்ற உள்ளது பற்றி கருத்து கூறியுள்ள மரிஸா, இது தனக்கு பெருமை தரக்கூடியது என்று தெரிவித்துள்ளார். 700 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்ட யாஹூ நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரியாக தன்னை நியமனம் செய்ததற்காக முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவேன் என்றும் மரிஸா கூறியுள்ளார்.

மரிஸாவின் நியமனத்தை யாஹூ இயக்குநர்கள் குழு ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளது.

English summary
Yahoo! today announced that it has appointed Marissa Mayer as President, Chief Executive Officer and Member of the Board of Directors effective July 17, 2012.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X