For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

500 ஆண்டு கால பழமை வாய்ந்த பிரா, பாண்டீஸ் கண்டுபிடிப்பு!

|

500-year-ago lingerie found in Austrian castle vault shocks historians
500 ஆண்டு கால பழமை வாய்ந்த பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் ஆஸ்திரிய நாட்டில் உள்ள ஒரு கோட்டையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளாடைகள் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. லினன் துணியால் ஆனவை இந்த உள்ளாடைகள். அக்காலத்தில் பெண்கள் உள்ளாடைகளைப் பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை என்றே வரலாற்றாசிரியர்கள் கருதி வந்தனர். ஆனால் தற்போது கிடைத்துள்ள உள்ளாடைகளைப் பார்க்கும்போது 500 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் உள்ளாடைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரியாவில் உள்ள ஒரு கோட்டையில் ஒரு பெட்டிக்குள் இந்த பிராக்களும், பாண்டீஸ்களும் வைத்து பூட்டப்பட்டிருந்தன.

பாண்டீஸ்கள், கிட்டத்தட்ட இன்றைய பாண்டீஸ் வடிவத்தை ஒத்துள்ளன. நைந்து, லேசாக கிழிந்த நிலையில் இவை உள்ளன. பிராக்கள், கிட்டத்தட்ட இக்காலத்து பிராக்கள் போலவே உள்ளன. கப்புகள், ஸ்டிராப்புகளுடன் கூடியதாக உள்ளன.

அந்தக் காலத்தில் ஆண்கள் தற்போதைய ஷார்ட்ஸ் போன்ற உடைகளையே உள்ளாடைகள் போலப் பயன்படுத்தியதாக ஏற்கனவே சான்றுகள் உள்ளன. ஆனால் பெண்கள் பிரா, பேண்டீஸ் போன்றவற்றைப் பயன்படுத்தியதற்கு இதுவரை உரிய சான்று இல்லை. ஆனால் தற்போது ஆஸ்திரிய கோட்டையில் கிடைத்துள்ள உள்ளாடைகள் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளன.

இதுகுறித்து லண்டன் மியூசியம் கியூரேட்டர் ஹில்லாரி டேவிட்சன் கூறுகையில், தற்போதைய கண்டுபிடிப்பு பேஷன் டிசைனிங் குறித்த புதிய தகவல்களை நமக்குத் தெரிவிக்கிறது. இதுவரை இப்படி ஒரு கண்டுபிடிப்பு வந்ததில்லை. இப்போது பெண்கள் எதையெல்லாம் பயன்படுத்துகிறார்களோ அதையே அந்தக் காலத்திலும் பெண்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதையே இது உணர்த்துகிறது என்றார்.

ஆஸ்திரியாவின் கிழக்கு டைரோலில் உள்ள லெங்பர்க் அரண்மனைக்குள்தான் இந்த உள்ளாடைப் புதையல் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோட்டையானது 1480ம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது. அப்போது இந்த உள்ளாடைகளை ஒரு பெட்டியில் வைத்து எங்காவது போட்டு வைத்திருக்கலாம். அது பின்னர் அப்படியே கண்டுகொள்ளாமல் போயுள்ளது. அந்தப் பெட்டியைத்தான் தற்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஈரப்பதம் இல்லாத இடத்தில் இந்த துணிகள் அடங்கிய பெட்டி இருந்ததால்தான், துணி பெரிய அளவில் கிழிந்து போகாமல் தப்பியுள்ளது. ரேடியோகார்பன் முறை மூலம் இதன் வயதை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மொத்தம் நான்கு பிராக்கள்,2 ஜோடி பாண்டீஸ்கள் அதில் இருந்தன. அதில் இரண்டு பிராக்கள், இப்போது உள்ளதைப் போலவே உள்ளன. மற்றவை முற்றிலும் வேறுபட்டதாக உள்ளன.

English summary
Lace and linen undergarments dating back to the 15th century, before women’s underwear was thought to have existed, have been found hidden in a vault beneath the floorboards of an Austrian castle. Despite their state of decay, the knickers bear more than a passing resemblance to the string bikini briefs that are popular today, while the bra has the fitted cups and delicate straps of its modern-day counterparts. The undergarments were among almost 3,000 fragments of clothing and other detritus that had been found in Lengberg Castle in East Tyrol during recent renovations. The haul included four bras and two pairs of pants. Two of the bras resemble modern counterparts but the others have been described rather bluntly as “shirts with bags.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X