For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவூதி அரேபியா வாழ் இந்தியருக்கு இலவச சட்ட உதவி வழங்க தனி அமைப்பு தொடக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

ஜெட்டா: சவூதி அரேபியாவில் வாழும் ஏழை இந்தியர்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்குவதற்கான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

"Pleace India" என்ற பெயரிலான இந்த அமைப்பு இந்திய உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பின் இணையதளத்தின் மூலம் ( http://pleaceindia.com )சவூதி அரேபியா வாழ் இந்தியர்கள் தங்களது சட்ட உதவிகளை கோரலாம். Pleaceindia அமைப்பின் பிரவாசி லீகர் எய்ட் செல் என்ற பிரிவு சட்ட உதவிகளை வழங்கும்.

சவூதி அரேபியாவில் வாழும் இந்தியர்கள் உரிய சட்ட உதவிகளைப் பெறுவதற்கு இந்திய தூதரகத்தில் உள்நாட்டு சட்ட ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்றும் இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்திய தூதரகம், இந்தியர்களிடம் பெற்றிருக்கும் சுமார் 15 மில்லியன் சவூதி ரியாத்தை இந்தியர் நலனுக்காக செலவிட முன்வர வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சவூதி அரேபியா வாழ் இந்தியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சட்ட உதவிகளைப் பெற்றுத் தருவதற்கும் இந்திய தூதரகம் உறுதுணையாக நிற்க வேண்டும் என்றும் Pleaceindia அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

English summary
A non-profitable non-political movement to help needy and poor Indians in Saudi Arabia has been formed. The Pravasi Legal Aid Cell will address the grievances of NRIs who have been suffering from mistreatment and harassment from various corners, the organizers explained.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X