For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேந்தி பூ விளைச்சல் அமோகம், கிராக்கியும் அதிகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

Google Oneindia Tamil News

நெல்லை: சுரண்டை பகுதியில் கேந்தி பூ மகசூல் அமோகமாக உள்ளதாலும், அதற்கு நல்ல கிராக்கி இருப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சுந்தரபாண்டியபுரம், மேலப்பாவூர், குறும்பலபேரி, சிவகாமிபுரம், கீ்ழ்சுரண்டை, சேர்ந்தமரம், தான்னூத்து, கடையாலுருட்டி, வேலப்பநாடானூர், வீரசிகாமணி ஆகிய பகுதி விவசாயிகள் கேந்தி பூ மகசூலில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஓசூர் கேந்தி பூ மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளதால் சுரண்டை பகுதியில் கேந்தி பூ அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது.

தற்போது சுரண்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் கேந்தி பூ மகசூல் அமோகமாக உள்ளது. இதனால் பூ மார்க்கெட்டுக்கு கேந்தி பூ வரத்து அதிகரித்துள்ளது. இந்த பகுதியில் மகசூலாகும் கேந்தி பூக்கள் சங்கரன்கோவில், தென்காசி, சுரண்டை, சிவகாமிபுரம் பகுதியில் உள்ள கமிஷன் கடைகளில் விற்கப்படு்கிறது. ஒரு கிலோ பூ ரூ.30 முதல் ரூ.40 வரை கிடைக்கிறது. குறைந்த செலவில் அதிக வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
Kenthi flower production has increased in Surandai and its neighbouring villages. Since the demand for the flower is high, farmers are happy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X