For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் சத்தீஸ்கர் வீட்டுவசதி துறை செயலாளராக நியமனம்

Google Oneindia Tamil News

Alex Paul Menon
சுக்மா: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளால் கட்டத்திச் செல்லப்பட்ட சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் உள்ளிட்ட 17 ஐ.ஏ.‌எஸ். அதி்காரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தி்ல் உள்ள சுக்மா மாவட்ட கலெக்டராக நெல்லையைச் சேர்ந்த அலெக்ஸ் பால் மேனன் பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நக்சலைட்டுகளால் கட்டத்திச் செல்லப்பட்டார். நக்சலைட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் கடத்தப்பட்டு 2 வாரம் கழி்த்து மே மாதம் 3ம் தேதி விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அலெக்ஸ் பால் மேனன் உள்பட 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து சத்தீஸ்கர் அரசு உத்தரவிட்டுள்ளது. அலெக்ஸ் பால் மேனனை வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் துறை துணை செயலாளராக நியமித்துள்ளனர். மேலும் அவர் ராய்ப்பூர் அபிவிருத்தி அதிகார சபையின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பையும் கூடுதலாக வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நக்சலைட்டுகளால் விடுவிக்கப்பட்டபோது அம்மாநில முதல்வர் ராமன்சி்ங் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சுக்மா மாவட்ட கலெக்டர் விரும்பும் வரையில் அவர் அந்த மாவட்டத்திலேயே தொடர்ந்து பணியாற்ற உதவி செய்யப்படும் என்றார்.

இந்நிலையில் அலெக்ஸ் பால் மேனன் திடீ‌ரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chattisgarh government has transferred 17 IAS officers including Sukma collector Alex Paul Menon who was abducted by naxals in april.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X