For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழறிஞர் முனைவர் அ.பாண்டுரங்கன்

Google Oneindia Tamil News

Pandurangan
தமிழறிஞராகவும், மிகச்சிறந்த ஆராய்ச்சியாளராகவும் அறியப்படும் முனைவர் அ.பாண்டுரங்கன் அவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் தீசுப்லாபுரம் என்னும் ஊரில் 10.03.1936 இல் பிறந்தவர். இந்த ஊரில் வாழ்ந்த இரா.அழகர்சாமி, தனுக்கோடி என்ற இராமக்கம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். இளம் அகவையில்(10 நாள் குழந்தையில்) தாயை இழந்த இவரை இவர்தம் பாட்டியார் முத்தம்மாள் அவர்கள் வளர்த்தார்கள். சிறிய தந்தையார் இராஜூ என்ற இராமசாமி அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தார்.

பிறந்த ஊரான தீசுப்லாபுரத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். ஆண்டிப்பட்டியில் எட்டாம் வகுப்புவரை பயின்றவர். பள்ளியிறுதி வகுப்பைத் தேனி நாடார் சரசுவதி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இடைநிலை வகுப்பையும் (இண்டர்மீடியட்), இளங்கலை வகுப்பையும் (கணக்கு) மதுரைக் கல்லூரியில் பயின்றவர். சென்னை மாநிலக்கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர்(1958-60). தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் நல்ல புலமையுடைய பேராசிரியர் அ.பாண்டுரங்கன் அவர்கள் இருமொழியிலும் எழுதுவதிலும் ஆற்றல் பெற்றவர். வைணவ நூல்களில் ஆழங்கால்பட்ட பயிற்சியுடையவர்.

புதுச்சேரி தாகூர் அரசினர் கலைக்கல்லூரியில், பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்(Tutor) (1961-62). பின்னர் இதே கல்லூரியில் துணை விரிவுரையாளராக (Assistant Lecturer), (ஏழாண்டுகள் பணிபுரிந்தார்(1962- 69). பின்னர் புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் பேராசிரியர்- துறைத் தலைவராக ஓராண்டு பணிபுரிந்தார்.(Professor and Head of Dept.), 1969-70,

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நான்காண்டுகள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு (1970-74), முனைவர் முத்துச்சண்முகன் பிள்ளை அவர்களின் மேற்பார்வையில் காப்பியக் கொள்கையும் கம்ப ராமாயணமும் (Epic Theory and Kamba Ramayanam) முனைவர் பட்டம் பெற்றவர். முனைவர் பட்ட ஆய்வுக்குப் பிறகு புதுவை தாகூர்கல்லூரி, காரைக்கால் அறிஞர் அண்ணா கல்லூரியில் பணியாற்றிய பிறகு புதுவைப் பல்கலைக் கழகத்தின் சுப்பிரமணிய பாரதி தமிழ்மொழி, இலக்கியப் புலத்தின் (Professor and Head of Subramanya Bharathi School of Tamil Language and Literature), காரைக்கால் மையத்திலும், புதுவையிலும் பேராசிரியர் - துறைத்தலைவராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

ஆசிரியர் எழுதி வெளியிட்டுள்ள நூல்கள் (Books authored):

(1) என்றுமுள தென்றமிழ், 1988,

தமிழரங்கம், புதுச்சேரி, (சிலப்பதிகாரம் சங்க இலக்கியம் கம்ப ராமாயணம் பற்றிய கட்டுரைகள்)

(2) காப்பிய நோக்கில் கம்ப ராமாயணம், 1989,

என். சி.பி.எச், சென்னை(கம்ப ராமாயணம் பற்றிய ஆசிரியரின் முனைவர் பட்ட ஆய்வேட்டின் ஒரு பகுதி. மிகவும் சிறப்பாக வரவேற்கப்பட்ட இந்நூல் 2007 ஆம் ஆண்டு என்.சி.பி.எச்.நிறுவனத்தின்வழியாக இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.)

(3) காப்பிய இயல், 1992

தமிழரங்கம், புதுச்சேரி(காப்பியங்கள் தொடர்பான மேலைநாட்டுக் கொள்கைகளையும் வடமொழிக் கொள்கைகளையும் தமிழ்க் காப்பியங்களோடு ஒப்பிட்டுத் தமிழ்க் காப்பியக் கோட்பாட்டை இந்நூல் உருவாக்க முயன்றுள்ளது)

(4) தமிழாய்வு புதிய கோணங்கள்,

தமிழரங்கம், புதுச்சேரி. (தமிழிலக்கியங்கள் வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையில் விமர்சிக்கப்பட்டுள்ளன)

(5) கம்பரும் வால்மீகியும், 2003,

தமிழரங்கம், புதுச்சேரி (கம்ப ராமாயணத்தையும் வால்மீகத்தையும் ஒப்பிட்டுக்காட்ட முயன்றுள்ளது)

(6) வேதநாயகம் பிள்ளை, 1994,

சாகித்திய அகாதமி, புது டில்லி (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் முதல் நாவலாசிரியரான வேதநாயகம் பிள்ளை பற்றிய ஓர் ஆழமான அறிமுக நூல்-நூலின் தகுதி காரணமாக, இந்நூல் மூன்று பதிப்புகளைக் கண்டுள்ளது.)

(7) தொகையியல், 2008,

தமிழரங்கம், புதுச்சேரி(சங்க இலக்கியம் - குறிப்பாக எட்டுத்தொகை நூல்கள் குறித்து ஒரு விரிவான ஆய்வு இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறப்பாகத் தொகைநூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பாடப்பட்ட காலம், அவை தொகைகளாகத் தொகுக்கப்பட்ட காலம், தொகுப்பு நெறிகள், தொகுத்தமைக்கான வரலாற்றுச் சூழ்நிலை, தொகுத்தோர் தொகுப்பித்தோர் பற்றிய நுட்பமான ஆய்வு இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது)

(8) வாணிதாசன், 2008,

சாகித்திய அகாதமி, புது டில்லி (பாவேந்தர் பரம்பரையில் எழுதிய வாணிதாசன் பற்றிய ஆய்வு நூல் - இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)

(9) Sangam Classics - New Perspectives, 2010,

International Institute of Tamil Studies, Chennai.

(10) சான்றோர் கவி, 2010,

சேகர் பதிப்பகம், சென்னை Kaumaram, Saktam, Ganapatyam and Sourams, NCBH.

பதிப்பித்து வெளியிட்டுள்ள நூல்கள்:

(1) இலக்கிய அறிமுகம் பட்ட வகுப்பு (இளங்கலை-இளம் அறிவியல்) , பகுதி - 1, தமிழ் முதலாண்டு, 1989, புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி

(2)பாட்டும் உரைநடையும், பட்ட வகுப்பு, (இளங்கலை-இளம் அறிவியல்) பகுதி - 1, தமிழ் முதலாண்டு, 1994, புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி

(3)பாட்டும் உரைநடையும், பட்ட வகுப்பு (இளங்கலை-இளம் அறிவியல்) , பகுதி-1, இரண்டாம் ஆண்டு, 1995, புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி

(4) நோக்கு -1 (சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழி இலக்கியப் புலம், புதுவைப் பல்கலைக் கழகம், காரைக்கால் மையத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் ஆய்வு மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு) 1989, புதுவைப் பல்கலைக் கழகம், காரைக்கால்

(5)நோக்கு - 2 1990, காரைக்கால்

(6)நோக்கு - 3 1991, காரைக்கால்

(7) நோக்கு - 4 1992, காரைக்கால்

(8)Common Forms and Themes in Indian Literature, A collection of papers presented in the National Seminar on Common Forms and Themes in Indian Literature, Pondicherry University, 1993

(9)எண்பதுகளிலும் அதற்குப் பிறகும் இந்திய அறிவியல் (ச.பி. குப்தாவின் ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. ஆசிரியரே மொழிபெயர்த்துப் பதிப்பித்துள்ளார்), 1994, புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி

(10)Palm Leaf Manuscripts of Indian Languages, 1995, Asian Institute of Tamil Studies, Madras

சங்க இலக்கியம் இலக்கணம் தொடர்பான ஆய்வுகள்

(அ) பல்கலைக் கழக மானியக் குழுவின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட சங்க இலக்கிய அகராதித் திட்டத்தின் கீழ்ச் சங்க இலக்கியம் முழுவதற்குமான சொல்லடைவு உருவாக்கப் பட்டுள்ளது. இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட சொல்லடைவுகள் எட்டுத்தொகை பத்துப் பாட்டு உள்ளிட்ட நூல்களுக்குத் தனித்தனியாக உருவாக்கப்பட்டன. இவ்வாய்வாளர் சுமார் 1500 பக்க அளவில் உருவாக்கிய சொல்லடைவு எல்லாத் தொகை நூல்களுக்கும் சேர்த்து ஒரு முழுமையான சொல்லடைவாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முன் உருவாக்கப்பட்ட சொல்லடைவுகளிலிருந்து மாறுபட்டு ஒரு சொல் எத்தனை இடங்களில் வருகின்றது, அச்சொல் எவ்வெப் புலவர்களால் எவ்வெவ் நூல்களில் கையாளப்பட்டுள்ளது, என்னும் தாகவல்கள் ஓரிடத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. இதன்மூலம் ஒரு சொல் எத்தனை இடங்களில் வருகின்றது என்று கணக்கிட (Word Frequency) இயலும். அத்துடன் அச்சொல்லின் பொருண்மை மாற்றம் (Semantic change) எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்றும் அறிய இயலும். இச்சொல் அடைவு இன்னும் அச்சிடப்படவில்லை

(ஆ) சிறப்புநிலைப் பேராசிரியர் (Emeritus Professorship) பதவி வகித்த காலத்தில் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றள்ள பயனிலை வடிவங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. பொதுவாக எச்ச வினைகள் என்று கருதப் பெறும் சில எச்ச வடிவங்கள் முற்று வடிவங்களாகத் தொழிற்படுவதை வாக்கிய அமைப்பிலிருந்து பார்க்கும்போது காண முடிந்தது. பால் காட்டாத பொது வினைகள் (Impersonal Finite Verbs) தொகைநூல்களில் இடம் பெறுவதைக் காணமுடிந்தது. அருகிய வழக்காக வரும் இவ்வினை வடிவங்கள் இன்றளவும் கன்னியாகுமரி மாவட்டப் பேச்சுத் தமிழிலும் இலங்கை, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழிலும் இடம் பெறுவதையும் காண முடிந்தது. இத்திட்டக் கட்டுரையும் இன்னும் நூல் வடிவம் பெறவில்லை

(இ) Cattantai: An Appraisal, A Note on Ceyticin Verbals, உடம்படுமெய் புதிய பார்வை போன்ற இலக்கணம் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளின் மூலம் பழந்தமிழ் இலக்கணம் பற்றிய சில புதிய சிந்தனைகள் (insights) முன் வைக்கப்பட்டுள்ளன

PHISPC வெளியிட்டுள்ள ஆசிரியரின் Sangam Classics on kingship and Society, Religious Thoughts of Snagam Classics என்னும் இரண்டு கட்டுரைகளின் வாயிலாக ஆசிரியர் சங்க இலக்கியங்களைச் சமுதாய வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் விளக்க முயன்றுள்ளார்

செம்மொழித் தமிழ் இலக்கிய மையத்தின் சார்பில் தமிழர்களின் தொல்சமயம் என்னும் ஆய்வேடு கொடுக்கப்பட்டுள்ளது.

பங்கேற்ற அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்

(1) அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையில்
இரத்தின சபாபதி பிள்ளை அவர்களின் அறக்கட்டளையில்
(1) பக்தி இயக்கத்தில் திருஞான சம்பந்தரின் இடம்.
(2) பக்தி இயக்கத்தில் திருநாவுக்கரசரின் இடம் என்னும் இரண்டு சொற்பொழிவுகள், 1993

2) பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலைஅறிவியல் செந்தமிழ்க் கல்லூரியில்
(1) கம்பரின் வருணனைத் திறம்
(2) கம்ப ராமாயண யாப்பு
என்னும் இரண்டு சொற்பொழிவுகள், டிசம்பர், 1996

3) காரைக்குடி, அழகப்பா பல்கலைக் கழகம் வ.சுப. மாணிக்கனார் அறக்கட்டளை சார்பில் சங்க இலக்கியங்களில்
(1) குறிஞ்சித் திணை
(2) நெய்தல் திணை
பற்றிய இரண்டு சொற்பொழிவுகள், டிசம்பர், 1998

(4) கேரளப் பல்கலைக் கழகம், தமிழ்த்துறை
பேராசிரியர் ச. வையாபுரி பிள்ளை அறக்கட்டளைச் சொற்பொழிவு, 2005

பரிசுகளும் பாராட்டுகளும்

அ)சிவபோக சாரம் - சைவ சித்தாந்தம் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு, மாநிலக் கல்லூரி, சென்னை, 1959

ஆ)சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பட்டமேற்படிப்பு வகுப்பில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றமைக்கு டாக்டர் கே. எஸ். கிருஷ்ணன் அறுபதாம் ஆண்டு நினைவுத் தங்கப் பதக்கமும் மதிப்பிற்குரிய (Reverend) ஜான் லாஸரஸ் தங்கப் பதக்கமும் பெற்றமை, 1960

இ) சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கிற்கு ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷனால் (பேலூர்) அழைக்கப்பெற்று "உலக அமைதிக்குச் சமயத்தின் பங்களிப்பு" என்னும் பொருளில் கட்டுரை படித்தமை, கொல்கொத்தா, 1994

ஈ)தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாம் உலகத் தமிழ்க் கருத்தரங்கு தொடர்பான ஆலோசனைக் குழு உறுப்பினர், 1995

உ) புதுவைப் பல்கலைக் கழகத்தில் பணி மூப்பு எய்தியதும் (சூன்-1995) சங்க இலக்கியம் தொடர்பாக மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்காக இரண்டு ஆண்டுகள் (சூலை-1995-சூன்19970) பணி நீட்டிப்பு பெற்றமை

ஊ) அரவிந்தர் சிந்தனைக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு, புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி 1988

எ) சென்னை இந்து மிஷனும் காஞ்சி சங்கர மடமும் இணைந்து நடத்திய ‘பழந்தமிழ் இலக்கியங்களில் இந்து சமயம்‘ ஆறுதல் பரிசு, 1999

ஏ) சென்னை இந்து மிஷனும் காஞ்சி சங்கர மடமும் இணைந்து நடத்திய ‘கம்பனும் வால்மீகியும்‘ கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு, 2000

ஐ)புதுலைக் கம்பன் கழகம், அருணகிரி அறக்கட்டளை சார்பாகக் கம்பனைப் பற்றிய சிறந்த நூலுக்குப் பரிசு ‘கம்பரும் வால்மீகியும்‘ என்னும் நூல் பரிசு பெற்றமை, 2004

ஒ)பல்கலைக் கழக மானியக் குழு சிறப்பு நிலைப்பேராசிரியர் (செப்டம்பர் 2002 - ஆகஸ்டு 2004)

ஓ)திருமலை - திருப்பதி தேவஸ்தான நூல் வெளியீடு, உதவிக் குழு உறுப்பினர், 2004 - 2006

க)பிர்லா அறக்கட்டளை ‘சரஸ்வதி சம்மான்‘ விருதுக்குத் தமிழ் இலக்கியங்களைத் தேர்ந்தெடுக்கும் ‘பாஷா சமிதிக் குழு‘ உறுப்பினர் 1995 - 1998

கா)இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அழைப்பை ஏற்று 1993-1996, 1997-1998 ஆகிய ஆண்டுகளில் திணைக்களம் நடத்திய பல்வேறு கருத்தரங்குளில் தலைமையேற்றமை கட்டுரைகள் படித்தமை.

கல்விக்கூடங்கள் ஆய்வு நிறுவனங்கள் ஆய்விதழ்கள் ஆகியவற்றோடு உள்ள தொடர்புகள்:

அ)கல்விக்குழு உறுப்பினர், சென்னைப் பல்கலைக் கழகம்,1968-69

ஆ)உறுப்பினர், ஆட்சிக்குழு, புதுவைப் பல்கலைக் கழகம்,1987-90

இ)பாடத்திட்டக்குழு பட்டமேற்படிப்பு, அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி, (1987-90)

ஈ)உறுப்பினர் கல்விக்குழு (Academic Council), புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி,1987-92

உ)தலைவர், பாடத்திட்டக்குழு (பட்டப் படிப்பு), புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி, 1957-96

ஊ)உறுப்பினர், பாடத்திட்டக்குழு (பட்ட மேற்படிப்பு), மதுரை-காமராசர் பல்கலைக் கழகம், மதுரை, 1993-96

எ)உறுப்பினர், மொழிப்புலம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர், 1994-99

ஏ) பொருளாளர், புதுவை வரலாற்றுக் கழகம், புதுச்சேரி, 1995-99

ஐ) செயலாளர், திராவிட மொழியியல் கழகம் (Dravidian Linguistics Association) , திருவனந்தபுரம், 1996-1999

அனைத்திந்திய அளவில் இலக்கியப் பணிகள்:

அ) சாகித்திய அகாதமி தயாரித்த இந்தியப் பேரிலக்கியங்கள் தொகுப்பில் தமிழ் மொழிப் பகுதி உதவி ஆசிரியர்.

ஆ) சாகித்திய அகாதமிக்காக வேதநாயகம் பிள்ளை நூலை எழுதி வெளியிட்டது, 1994

இ) தேசியப் புத்தக நிறுவனத்துக்காக (National Book Trust), இந்தியச் சிறப்பிலக்கியங்கள் தொகுப்பில் தமிழ் மொழி உதவி ஆசிரியர்

ஈ) கே.கே. பிர்லா அறக்கட்டளை, சரஸ்வதி சம்மான் தேர்வுக்குழு உறுப்பினர், 1995-98

உ) சாகித்திய அகாதமிக்காக வாணிதாசன் நூலை எழுதி வெளியிட்டது, 2008

முகவரி:

முனைவர் அ.பாண்டுரங்கன் அவர்கள்
30, 19-ஆவது குறுக்குத் தெரு,
அவ்வை நகர்,
இலாசுப்பேட்டை அஞ்சல்,
புதுச்சேரி-605 008.
தொலைபேசி: (0413) 2251065
கைபேசி: 94866 2373

நன்றி: http://muelangovan.blogspot.in/

English summary
This is brief writeup about on Tamil scholar Dr.A.Pandurangan, who has contributed in a big way to the field of Tamil literature
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X