For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கம்யூனிஸ்ட் சீனாவின் அகராதியில் இனி 'காம்ரேட்' கிடையாது!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Comrade
பீஜீங்: சீன நாட்டின் அகராதியில் இருந்து காம்ரேட், டாங்ஸி என்ற சொற்களை நீக்கிவிட அந்நாட்டு அரசு உத்தவிட்டுள்ளது.

காம்ரேடுகளையும், கம்யூனிஸடுகளையும் பிரிக்க முடியாது. கம்யூனிஸ்டுகள் ஒருவரை ஒருவர் காம்ரேட் என்றுதான் அழைத்துக் கொள்வார்கள். அதேபோல ஓரினச் சேர்க்கையாளர்களும் காம்ரேட் என்ற வார்த்தையை தான் பயன்படுத்துகின்றனர். எனவே ஓரின சேர்க்கையாளர்களை குறிக்கும் காம்ரேட், டாங்ஸி என்ற சொற்களை அகராதிகளில் இருந்து நீக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து இந்த வார்த்தைகளை நீக்கிவிட்டதாக கான்டம்பரரி சைனீஸ் டிக்ஷனரி உள்ளிட்ட அகராதி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதேசமயம், உலகில் பரவலாக ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் கிடைத்து வரும் நிலையில், இந்த சொல்லை அகராதியில் இருந்து நீக்குவது சரியல்ல என்று ஓரினச் சேர்க்கையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அகராதியில் இருந்து வார்த்தையை நீக்கிவிட்டால் மக்களின் மனதில் இருந்து அதை அழித்துவிட முடியாது என்கின்றனர் ஒரினச் சேர்க்கையாளர்கள்.

இதுகுறித்து மொழி வல்லுனர்கள் கூறுகையில், அகராதியில் நல்ல சொற்களும் உண்டு. தீய சொற்களும் உண்டு. அதற்காக தீய சொற்களை நீக்குவது நல்லதல்ல. அவை மொழியின் அம்சம். அகராதியில் இருந்து நீக்கினால் மக்கள் உச்சரிக்காமல் இருப்பார்களா? மக்கள் வழக்கத்தில் இருந்து அவ்வளவு சீக்கிரம் நீக்கிவிட முடியாது என்று கூறுகின்றனர்.

நம்ம ஊர் காம்ரேடுகள் என்ன சொல்கிறார்கள்...?

English summary
A widely-respected Chinese dictionary has announced that it is dropping the word 'comrade,' a commonly-used term in the Chinese language for gays.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X