For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போறாராம் அன்னா ஹசாரே(அப்ப கூட்டம் வந்துரும்?)

By Mathi
Google Oneindia Tamil News

Anna Hazare
டெல்லி: தமது குழுவினர் டெல்லியில் நடத்தி வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு இல்லாத நிலையில் வலுவான லோக்பால் மசோதா நிறைவேற இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவேன் என்று அறிவித்திருக்கிறார்.

டெல்லியில் உண்ணாவிரதம் இருந்து வரும் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

நாங்கள் எவ்வளவோ வலியுறுத்தியும் வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்படவில்லை. ஜன்லோக்பால் நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்,

நாடாளுமன்றத்துக்கு நல்லவர்கள் வரவில்லையென்றால் வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர முடியாது. ஒரு ஓட்டுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட நபர்கள் வெற்றி பெற்றால், பணம் சம்பாதித்து, அதை என்ன செய்வதென்று தெரியாமல் வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள். அவர்களை வாக்காளர்கள் விரட்டியடிக்கவேண்டும். ஒரு சட்டமன்றத்தேர்தலுக்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை வேட்பாளர்கள் செலவிடுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு ரூ.50 கோடி செலவு செய்கிறார்கள். இதனால் எங்களால் கட்சி ஆரம்பிக்க முடியாது என்றார் அவர்.

கூட்டம் வராத நிலையில் இப்படி அன்னா ஹசாரே அறிவித்த பிறகாவது கூட்டம் சேருமா என்று பார்க்கலாம்.

English summary
A poor crowd on a weekend at Team Anna's indefinite fast today did not deter Anna Hazare to threaten a fast-unto-death from tomorrow on Lokpal issue and talk about a political alternative in the 2014 elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X