For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுரங்கப் பாதையில் ஆக்சிஜன் குழாய்கள் போட்டு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள

By Mathi
Google Oneindia Tamil News

ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் எல்லை அருகே தீவிரவாதிகள் ஊடுருவுவதற்காக அமைக்கபப்ட்ட 400 மீட்டர் நீள சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய - பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள சம்பா பகுதியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதையை எல்லைப் பாதுகாப்புப் படையின் ஜம்மு பிரிவு இயக்குநர் என்.எஸ்.ஜாம்வால் நேற்று பார்வையிட்டார்.

அதன் பினன்ர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பாகிஸ்தான் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள முள்வேலியைத் துண்டிப்பதன் மூலமும் பயங்கரவாதிகளால் ஊடுருவ முடியவில்லை. எனவே தரைக்கு அடியில் சுரங்கம் தோண்டி அதன் மூலம் ஊடுருவும் புதிய முறையைப் அவர்கள் பின்பற்றியுள்ளனர்.

சுரங்கத்துக்குள் ஆக்சிஜன் குழாய்களைப் பயன்படுத்தியிருப்பது மிகவும் திட்டமிட்டு அதிநவீன முறையில் இது தோண்டப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. எனினும், இந்தச் சுரங்கத்தின் வெளியேறும் வழி இன்னும் கண்டறியப்படவில்லை. பாகிஸ்தானுக்குள் எவ்வளவு தூரத்துக்கு இது செல்கிறது என்பது இன்னும் உறுதியாகவில்லை. சுரங்கத்தின் நீளம் மற்றும் வெளியேறும் வழியைக் கண்டறியும் பணியை நாங்கள் செய்து முடிப்போம் என்றார் அவர்.

English summary
The operation to dug open the 400-meter long tunnel, which was discovered on Saturday along the Indo-Pak Border in Samba district is in full swing. A team of senior officials from New Delhi will be visiting the spot on Sunday to have a look at the cross-border tunnel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X