For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எபோலா வைரஸ் கொன்னுடும்.. யாரோடும் கை குலுக்காதீங்க..'உறவு' வைக்காதீங்க: உகாண்டா அதிபர்

By Mathi
Google Oneindia Tamil News

Yoweri Museveni
கம்ப்லா: உகாண்டாவில் ஆட்கொல்லி வைரஸான எபோலா தாக்கியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் யாரோடும் கை குலுக்க வேண்டும், மனைவியுடன் கூட உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அந்நாட்டு அதிபர் யோவெரி முசெவெனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், உகாண்டாவில் பரவிவரும் எபோலா வைரஸுக்கு மருத்துவத்தின் மூலம் சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதனால் இந்த வைரஸ் பரவிவிடாமல் இருக்க பொதுமக்கள்தான் தம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஒருவருக்கொருவர் கை குலுக்குவதன் மூலமாகவோ உடல் உறவு வைத்துக் கொள்வதன் மூலமாகவோ இந்த வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நிச்சயமாக இந்த இரண்டு செயலையும் அனைவரும் தவிர்ப்பதுதான் நல்லது என்று எச்சரித்துள்ளார்.

தலைநகர் கம்ப்லாவில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிப்பாலே மாவட்டத்தில்தான் 1976ஆம் ஆண்டு எபோலா ஆற்றில் இருந்து இந்த வைரஸ் முதன் முதலாக பரவியது. அதன் பின்னர் 200-ம் ஆண்டு 200க்கும் அதிகமானோரை எபோலா வைரஸ் காவு வாங்கியிருந்தது.

தற்போது மீண்டும் அதே மாவட்டத்தில் எபோலா பரவியிருக்கிறது. இந்த மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் பேர் எபோலா வைரஸால் பாதிக்கபப்டக் கூடிய அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எபோலா பரவி வருவதால் தற்போது மீண்டும் பரவ தொடங்கியிருப்பதால் உகாண்டா மரண பீதியில் உறைந்து போயிருக்கிறது.

English summary
Ugandan President Yoweri Museveni has advised people to avoid shaking hands, casual sex and do-it-yourself burials to reduce the chance of contracting the deadly Ebola virus after an outbreak killed 14 people and put many more at risk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X