For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லண்டன்காரர் செலவு செய்ய மாட்டேங்குறார்.. இந்தியாகாரருக்கு கஷ்டம்!

By Chakra
Google Oneindia Tamil News

Eurozone
லண்டன்: அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவும் சரியில்லாத பொருளாதார சூழல் காரணமாக உலகெங்கும் தொழில்துறைகள் பாதிப்பை சந்திக்க ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக உற்பத்தித் துறை கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

ஐரோப்பாவில் இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் ஆரம்பித்த பொருளாதார சரிவும் கடன் பிரச்சனையும் ஐரோப்பிய மண்டலத்தில் உள்ள மற்ற 13 நாடுகளையும் தாக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட தங்களது இறக்குமதியைக் குறைக்க ஆரம்பித்துவிட்டன.

இந்த இறக்குமதிக் குறைப்பால் மிகக் கடுமையான பாதிப்பை சீனாவும் இந்தியாவும் சந்தித்துள்ளன. இதனால் சீனா, இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்து பணியாளர்களையும் குறைக்க ஆரம்பித்துள்ளன.

இதே பிரச்சனையைத் தான் அமெரிக்க தொழில் நிறுவனங்களும் சந்தித்து வருகின்றன. அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் அளவு பெருமளவு குறைந்துவிட்டது. குறிப்பாக அமெரிக்கக் கார் நிறுவனங்களின் ஐரோப்பிய இறக்குமதி ஆர்டர்கள் சுருங்கிவிட்டன.

பொருளாதார சூழல் சரியில்லாத நிலையில் ஐரோப்பிய நாடுகளில் செலவு செய்வதும், முதலீடுகள் செய்வதும் பெரிய அளவில் சுருங்கிவிட்டது.

இதனால் கொரியா, தைவான், பிரேசில் ஆகிய நாடுகளின் ஐரோப்பிய ஏற்றுமதிகளும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

English summary
US and euro zone factory activity slumped again in July while Chinese manufacturing hit an eight-month low, surveys showed on Wednesday, as economies worldwide showed signs of slowing. Economic malaise was worst in the 17-country euro zone, where output plummeted and the manufacturing sector contracted for an 11th straight month as a downturn that began in smaller countries continued to spread into core euro area economies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X