For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிரியாவில் உச்சகட்ட போர்: அமைதித் தூதர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் கோபி அனான்

By Mathi
Google Oneindia Tamil News

Kofi Annan
ஜெனீவா: சிரியாவில் அரசுக்கு எதிராக யுத்தம் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்கள் கைகளில் இருக்கும் அலெப்போவை மீட்க அதிபர் ஆசாத்தின் அரசுப் படையினர் போராடி வருகின்றனர். போர் உச்சகட்டமாகிவிட்ட நிலையில் அமைதிக்கான சிறப்பு தூதர் கோபி அனான் பதவி விலக முடிவு செய்திருக்கிறார்.

சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவான அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சிப் படைகளுக்குமான யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இங்கு அமைதியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரபு நாடுகளின் தூதராக முன்னாள் ஐ.நா. செயலாளர் கோபி அனான் ஈடுபட்டு வந்தார். சிரியாவில் அமைதியை ஏற்படுத்தும் வகையிலான அமைதித் திட்டங்களையும் உருவாக்கியிருந்தார்.

இந்நிலையில் உச்சகட்டப் போர் நடைபெற்று வருகிறது. மேலும் கோபி அனானின் பதவிக்காலமும் இந்த மாத இறுதியில் முடிவடைகிறது. இந்நிலையில் தமது பதவிக்காலத்தை நீட்டிக்க விரும்பாமல் அமைதித் தூதர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள கோபி அனான் முடிவு செய்திருக்கிறார். ஆனாலும் சிரியாவில் அமைதி உருவாக்கப்பட வேண்டும் என்று அரபு நாடுகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சிரியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் மொத்தம் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

English summary
Former U.N. Secretary-General Kofi Annan is quitting as international peace envoy for Syria, frustrated by "finger-pointing" at the United Nations while the armed rebellion against President Bashar al-Assad becomes increasingly bloody.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X