For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவிகளை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்த தலைமை ஆசிரியர்

By Siva
Google Oneindia Tamil News

மால்டா: மேற்கு வங்கத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் தவறான முறையில் நடந்து கொண்டது மட்டுமல்லாமல் அவர்களை கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ளது நாசிபூர் எஸ்.எஸ். பாயிண்ட் உறைவிட ஆங்கில பள்ளி. அந்த பள்ளி ஹாஸ்டலில் தங்கி படிக்கும் 3 மாணவிகள் கலியசக் காவல் நிலையத்தில் தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் நஜிப் அலிக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது,

தலைமை ஆசிரியர் நஜிப் அலி எங்களிடம் தவறாக நடந்து கொண்டார். மேலும் இரவில் நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கையில் எங்கள் படுக்கையில் கட்டியிருந்த கொசு வலைக்குள் வந்து எங்களை திட்டியதுடன் கட்டாயப்படுத்தி எங்களை மது அருந்த வைத்தார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் சாபித்ரி மித்ரா மால்டா மாவட்ட நீதிபதி மற்றும் எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ளார்.

English summary
The police were inquiring into a complaint by girl students of a residential school at Kaliachak in Malda district that the principal allegedly behaved indecently with them and gave them liquor to drink.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X