For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய தேர்தல் ஆணையராக சையத் நஸீம் அகமத் ஜைதி நியமனம்

By Chakra
Google Oneindia Tamil News

Syed Nasim Ahmad Zaidi
டெல்லி: மத்திய தேர்தல் ஆணையராக முன்னாள் விமான போக்குவரத்துத் துறைச் செயலாளர் சையத் நஸீம் அகமத் ஜைதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்தார்.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜைதி, கடந்த 1976ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார்.

கடந்த ஜூலை 31ம் தேதி ஓய்வு பெறும்போது விமான போக்குவரத்துத் துறைச் செயலாளராக இருந்தார். இவர் விமான போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குனராகவும் இருந்துள்ளார்.

சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பில் இந்தியா சார்பில் நிரந்தர பிரதிநிதியாக கடந்த 2005-200-ம் ஆண்டு வரை இருந்துள்ளார். முன்னதாக, இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏ.ஏ.ஐ.) இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவரும், தேர்தல் ஆணையர்களாக இருவரும் உள்ளனர்.

இதில் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த எஸ்.ஒய். குரோஷி ஓய்வு பெற்றதையடுத்து தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருந்த வி.எஸ். சம்பத் தலைமைத் தேர்தல் ஆணையராக்கப்பட்டார்.

இதனால் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவிக்கு, சையது நஸீம் அகமத் ஜைதி செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார். மற்றொரு தேர்தல் ஆணையராக ஹெச்.எஸ். பிரம்மா உள்ளார்.

நேற்றே ஜைதி தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

English summary
Dr. Syed Nasim Ahmad Zaidi has today assumed the charge as Election Commissioner in the Election Commission of India. He fills the vacancy in the Election Commission caused by the assumption of charge by Sh. V.S. Sampath as the 18th Chief Election Commissioner (CEC) succeeding Dr. S.Y. Quraishi. Dr. Zaidi superannuated as Civil Aviation Secretary on July 31. Dr. Zaidi had earlier worked as Director-General of Civil Aviation, and was India’s representative in the International Civil Aviation Organisation. He was also the Joint Secretary in the Civil Aviation Ministry, and Commissioner of Bareilly Development Authority.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X