For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விலாஸ்ராவ் தேஷ்முக் மரணம்: கல்லீரல் தானம் தரவிருந்த டிரைவரும் சாவு!

Google Oneindia Tamil News

Vilasrao Deshmukh
சென்னை: கல்லீரல் புற்றுநோய் காரணமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக் இன்று மரணமடைந்தார்.

முன்னதாக இன்று அவருக்கு நடைபெறவிருந்த கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை. மூளைச் சாவடைந்த டிரைவர் ஒருவரின் கல்லீரலை எடுத்து தேஷ்முக்குப் பொருத்துவதாக இருந்த நிலையில் அந்த டிரைவர் மரணமடைந்ததால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை.

கல்லீரல் புற்றுநோய் காரணமாக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் தேஷ்முக் சேர்க்கப்பட்டிருந்தா. அவருக்கு கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. முழு கல்லீரலையும் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு கல்லீரலைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இந் நிலையில் சென்னையில் ஆகஸ்ட் 11ம் தேதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் 31 வயது டிரைவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மூளைச் சாவைச் சந்தித்தார். அவரை அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்திருந்தனர். அவரது கல்லீரலை தேஷ்முக்குக்குப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு டிரைவரின் குடும்பத்தினரும் சம்மதித்திருந்தனர்.

இதையடுத்து இன்று காலையில் கல்லீரலைப் பெற்று தேஷ்முக்கு அறுவைச் சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 12 மணி நேரம் இந்த அறுவைச் சிகிச்சை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. டிரைவரின் கல்லீரலை எடுத்துச் செல்வதற்காக குளோபல் மருத்துவமனையின் ஆம்புலன்ஸும் பொது மருத்துவமனைக்கு வந்திருந்தது.

ஆனால் டிரைவரின் குடும்பத்தினர் திடீரென பின்வாங்கி விட்டனர். மேலும் அதிகாலை இரண்டே முக்கால் மணியளவில் டிரைவரும் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். இதனால் அவரது கல்லீரலைப் பெற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

உயிருடன் இருப்பவரின் கல்லீரலை மட்டுமே தானமாக பெற முடியும் என்பதால் தேஷ்முக்குக்கு டிரைவரின் கல்லீரலைப் பெற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

கல்லீரலைப் பெற்றுத் தர முயன்ற நரேந்திர மோடி:

முன்னதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும், விலாஸ் ராவ் தேஷ்முக்குக்கு கல்லீரலைப் பெற்றுத் தர தீவிரமாக முயன்று வந்தார். டிவிட்டர் மூலலம் அவர் கோரிக்கையும் விடுத்திருந்தார். அத்தோடு நில்லாமல் குஜராத் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அவர் இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஆனாலும் மோடியால் கல்லீரலைப் பெற்றுத் தர முடியவில்லை.

இந் நிலையில் விலாஸ்ராவ் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மருத்துவமனையிலேயே அவர் மரணமடைந்தார்.

மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக்கின் உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து கடந்த 7ம் தேதி மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார்.

இரண்டு முறை மகாராஷ்டிர முதல்வராக இருந்துள்ள இவரது மகன் தான் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக். ரிதேஷின் மனைவி தான் நடிகை ஜெனீலியா ஆவார்.

கல்லீரல் பிரச்சனையோடு விலாஸ்ராவ் தேஷ்முக்கின் சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The 31-year-old school van driver, who was declared brain-dead and whose liver and kidney were to be transplanted in Union minister Vilasrao Deshmukh, died at 2.45am ahead of the transplant. Doctors at the Government General Hospital (GH) said he suffered a cardiac arrest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X