For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கி.வீரமணியின் தம்பி என்னை சந்தித்தார்-காஞ்சி சங்கராச்சாரியார்: அவதூறு வழக்கு போட்ட வீரமணி!

By Chakra
Google Oneindia Tamil News

Veeramani
சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் மனைவி மற்றும் தம்பி ஆகியோர் தன்னை சந்தித்ததாகக் கூறிய காஞ்சி சங்கராச்சாரியார் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார் வீரமணி.

இது குறித்து வீரமணி நிருபர்களிடம் பேசுகையில், சங்கரராமன் கொலை வழக்கில் நீதிமன்றம் ஜாமீன் அனுமதிக்காத நிலையில் புதுச்சேரி நீதிமன்றத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கை சந்தித்து வருகிறார். அவர் அளித்த ஒரு பேட்டியில் அப்பட்டமான, உண்மைக்கு புறம்பான செய்தியை கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியும், கி.வீரமணியும்தான் ஆன்மிகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், அவர்களின் குடும்பத்தினர் ஆன்மிகத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். கி.வீரமணியின் மனைவி மற்றும் தம்பியும், மத்திய அமைச்சர் அழகிரியின் மனைவியும் என்னை சந்தித்துள்ளனர் என்று கூறியிருக்கிறார்.

எனக்கு தம்பியே கிடையாது. எனது கொள்கையில் என்னைவிட என் மனைவிக்கு பற்று அதிகம்.

இப்படி இருக்கையில், திராவிடர் கழக தோழர்களிடையே என் மீது அவதூறை பரப்பியுள்ளார். இல்லாத ஒன்றை நடந்ததாக, உண்மைக்கு புறம்பான செய்தியை கூறி அவதூறை பரப்பிய காஞ்சி சங்கராச்சாரியார் மீது, திராவிடர் கழக தலைமை நிலைய செயலாளர் அன்புராஜ் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகை மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக அக்டோபர் மாதம் 5ம் தேதி ஆஜராக காஞ்சி சங்கராச்சாரியாருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது என்றார்.

டெசோ மாநாடு பிசுபிசுத்து விட்டதாகவும், எந்த தாக்கமும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறதே? என்று கேட்டதற்கு, டெசோ மாநாடு சரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதா என்பதை ராஜபக்சேவை பார்த்து அறிந்து கொள்ளலாம். இந்த மாநாடு ராஜபக்சேவுக்கு கலக்கத்தை உண்டாக்கி உள்ளது. உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. மாநாட்டை நடத்தவிடக்கூடாது என்று தமிழக அரசு நினைத்தது. ஆனால், சுதந்திர தின விழாவில் இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார். இதுவே பெரிய வெற்றிதான் என்றார் வீரமணி.

சங்கராச்சாரியாருக்கு எதிராக வீரமணி தரப்பு தாக்கல் செய்த வழக்கை பல ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
K Veeramani led Dravidar Kazhagam (DK) has filed a defamation casse against Kanchi Shakaracharyar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X