For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிஷலுடனான முதல் முத்தம் சாக்லேட் போன்றிருந்தது: அமெரிக்க அதிபர் ஒபாமா

By Siva
Google Oneindia Tamil News

Obama and Michelle
வாஷிங்டன்: தனது மனைவி மிஷலுக்கு தான் கொடுத்த முதல் முத்தம் சாக்லேட் போன்று சுவையாக இருந்ததாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த 1989ம் ஆண்டு மிஷலை முதன் முதலாக சந்தித்தார். அப்போது டேட் செய்யலாமா என்று ஒபாமா கேட்டதற்கு மிஷல் மறுத்துவிட்டார். ஆனால் சில மாதங்கள் கழித்து இருவரும் டேட்டிங் போக ஆரம்பித்தனர். பின்னர் 1991ம் ஆண்டு அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து 1992ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் மிஷலுக்கு தான் கொடுத்த முதல் முத்தம் சாக்லேட் போன்று சுவைத்ததாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இது குறி்த்து அவர் ஓ என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில்,

நான் மிஷலுக்கு முத்தம் கொடுத்தேன் அது சாக்லேட் போன்று சுவையாக இருந்தது என்றார்.

அவர்கள் ஹைட் பார்க் ஷாப்பிங் சென்டரில் வைத்து தான் முதன்முதலாக முத்தமிட்டுள்ளனர். அதன் நியாபகார்த்தமாக அந்த ஷாப்பிங் சென்டரின் உரிமையாளர் ரூ.2.62 லட்சம் மதிப்புள்ள கிரானைட் கல்லை கடந்த வாரம் அங்கு வைத்துள்ளார்.

முத்தம் கொடுக்கும் முன்பு அவர் மிஷலுக்கு பாஸ்கின் ராபின்ஸ் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஐஸ்கிரீம் கடையிலும் அவர்கள் வந்து சென்றதை நினைவு கூறும்வைகையில் நினைவுச்சின்னம் வைக்கப்பட்டுள்ளது.

English summary
US president Barack Obama told that his first kiss with Michelle tasted like chocolate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X