For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒசாமாவை தூக்கும் பிளானுக்கு கிரீன் சிக்னல் கொடுக்காமல் இழுத்தடித்தார் ஒபாமா- புதிய தகவல்

By Mathi
Google Oneindia Tamil News

Osama Bin Laden and Obama
லண்டன்: அல்குவைதா இயக்கத் தலைவரான ஒசாமா பின்லேடனை போட்டுத் தள்ள போடப்பட்ட திட்டங்களை மூன்று முறை அதிபர் ஒபாமா ஒத்தி வைத்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லேடனை கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். அதற்கு முன்னதாக கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஒசாமாவை போட்டுத் தள்ள திட்டம் தீட்டப்பட்டதாகவும் ஆனால் அதை உளவுத்துறை இயக்குநர் மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி உள்ளிட்டோரின் முடிவுக்கு ஒபாமா விட்டுவிட்டதாகவும் அமெரிக்காவில் வெளியாகி உள்ள புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. மேலும் அபோதாபாத் தாக்குதல் தவறானதாக அமைந்துவிடுமோ என்ற அச்சமும் ஒபாமாவுக்கு இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தை எழுதியிருப்பவர் வால்ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகைகளில் நிருபராக பணியாற்றி பின்னர் ராணுவ கமாண்டரான ரிச் மினிட்டர்தான். இந்த புத்தகத்தில் பின்லேடன் மீது தாக்குதல் நடத்துவது போன்ற சிறிய விவகாரங்களில் கூட பட்டும்படாமல் போகிற போக்கை கடைபிடிக்கக் கூடியவராகவே ஒபாமா இருந்தார் என்றும் விமர்சிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்தி நிலைகுலைய வைத்த பின்லேடனை போட்டுத் தள்ளிய பெருமையோடு வலம் வந்த ஒபாமாவுக்கு பின்னால் இப்படி ஒரு குழப்பமான நிலைப்பாடு இருந்ததை மினிட்டர் அம்லபப்படுத்தியுள்ளதன் மூலம் அவரது ஹீரோ இமேஜூக்கு வேட்டு வைத்திருக்கிறார் மினிட்டர்.

English summary
US President Barack Obama put off three times operations to kill world's most dreaded terrorist Osama bin Laden before finally going ahead with the mission at the insistence of Secretary of State Hillary Clinton, a new book has claimed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X