For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காக்பிட் அறையில் பெண்ணுடன் பயணம் செய்த கிங்பிஷர் விமானியின் சேட்டையால் சர்ச்சை

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியிலிருந்து மும்பை சென்ற கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானத்தில் காக்பிட் அறையில் எதிர்ப்புகளை மீறி பெண்ணை அமரவைத்து பறந்த விமானியால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

விமானிகளின் காக்பிட் அறையில் விமானிகளைத் தவிர வேறு யாரையும் அமர்த்தக் கூடாது என்று விமான ஒழுங்குமுறைகள் ஆணையத்தின் விதி. இந்த விதியை மீறி கிங்பிஷர் நிறுவனத்தின் தலைமை விமானி கடந்த 19-ந் தேதியன்று ஒரு பெண்ணை அழைத்து அமர வைத்து பறந்திருக்கிறார். இது தொடர்பாக விமான ஒழுங்குமுறைகள் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிங்பிஷர் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் மிர்புரி, விசாரணைகளை நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீதான செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு விமான பயணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால் இதையெல்லாம் காதில் கொள்ளாததால் போல் கிங்பிஷர் நிறுவனத்தின் தலைமை விமானியே செயல்பட்டிருக்கிறார்.

ஏற்கெனவே ஊதிய விவகாரம், கட்டண பாக்கி என பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் இப்பொழுது இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

English summary
The head of Kingfisher Airline's pilot training flew a woman in the cockpit on a Delhi-Mumbai flight and when the cabin crew protested, told them to stay away during the journey. The crew of the flight IT 304 of August 19 have now lodged a complaint with the management, saying the pilot flouted DGCA rules by flying an unauthorized person in the cockpit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X