For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியல்: மிஷெல் ஒபாமாவை முந்தினார் சோனியா!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Sonia Gandhi
நியூயார்க்: உலகின் சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு சோனியா காந்தி 6 வது இடத்தை பிடித்துள்ளார்.

பிரபல போர்ப்ஸ் பத்திரிகை உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அரசியல், வணிகம், ஊடகம் மற்றும் நவநாகரிக வாழ்க்கை(லைப் ஸ்டைல்) ஆகிய நான்கு பிரிவுகளில், பட்டியல் வெளியிடப்படுகிறது.இந்த ஆண்டுக்கான பட்டியல், சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்ஜெலா மெர்கல் முதல் இடம் பெற்றுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இந்த பட்டியலில் 6 வது இடம் கிடைத்துள்ளது. மிஷெல் ஒபாமா இந்த ஆண்டு 7 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவர் 2010 ம் ஆண்டு சக்தி வாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட சிக்கல்களை சரியாக கையாண்டதற்காக ஜெர்மன் பிரதமர் ஏஞ்ஜெலா மெர்கல் முதலிடம் பெற்றுள்ளதாக போர்ப்ஸ் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த பட்டியலின் புதிய வரவாக ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்சின் மனைவி லார்னே பாவெல் ஜாப்ஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

English summary
Forbes magazine ranked German Chancellor Angela Merkel the most powerful woman in the world for the second year in a row in the annual list dominated by politicians, businesswomen and media figures.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X