For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'நாசா'வுக்கு விசிட் அடித்ததா டைனோசர்?

Google Oneindia Tamil News

Dinosaur footprint found at NASA center
வாஷிங்டன்: தற்போது நாசா விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே டைனோசர் குடும்பத்தைச் சேர்ந்த நோடோசரின் கால் தடங்களை டைனோசர் குறித்த ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கால் தடமாக இது இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

டைனோசர் குறித்த ஆய்வுகள் உலகம் முழுவதும் தொடர்ந்தபடியே உள்ளன. இந்த நிலையில் நாசாவின், கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் மையம் அருகே ஒரு நோடோசரின் கால் தடத்தை டைனோசர் ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இது 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கால் தடமாக கருதப்படுகிறது.

இதுகுறித்து ஆய்வாளர் ரே ஸ்டான்போர்ட் கூறுகையில், தனது எதிரியிடமிருந்து தப்பித்து ஓடும்போது இந்த கால் தடம் பதிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இது மிகவும் அரிய கண்டுபிடிப்பாகும். நோடோசரின் கால் தடங்கள் இதுவரை நமக்கு அதிகம் கிடைத்ததில்லை. எனவே இது முக்கிய கண்டுபிடிப்பாகும். பாசில் வடிவில் இந்த கால் தடம் கிடைத்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கனடாவில் சில கால் தடங்கள் கிடைத்துள்ளன. ஆனால் தற்போது கிடைத்துள்ளது ஒரு முழுமையான கால் தடமாகும். இந்த கால் தடம் நோடோசரின் இடது பின்னங்கால் தடமாகும் என்றார் அவர்.

இந்த ஆய்வு முடிவை நாசா தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக தீவிர ஆய்வுக்கும் நாசா முடிவு செய்துள்ளது.

நோடோசர் என்பது ஜூராசிக் காலத்தின் பிந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த சிறிய வகை டைனோசர் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இவை வட அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் அன்டார்டிகா ஆகிய பகுதிகளில் வசித்துள்ளன. தாவரங்களை உண்ணும் விலங்கு வகை இது.

English summary
An amateur dinosaur hunter claimed to have discovered a rare cretaceous footprint from a nodosaur at NASA's Goddard Space Flight Center, most likely left more than 110 million years ago. Ray Stanford believes the dinosaur was running potentially away from a predator, when it left the footprint.
 "This is really quite a rare find," the New York Daily News quoted Mr Stanford as saying in a video posted on NASA's website this week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X