For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடன் 11 கருணை மனுக்கள் பெண்டிங்

By Mathi
Google Oneindia Tamil News

Pranab Mukherjee
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பரிசீலனைக்காக 11 கருணை மனுக்கள் நிலுவையில் இருக்கிறது.

கருணை மனுக்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சுபாஷ் அகர்வால் என்பவர் கோயிருந்ததற்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலில், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட 26 கருணை மனுக்களை மீண்டும் பரிசீலிப்பதற்காக கடந்த 2009-12 காலகட்டத்தில் உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றுக் கொண்டது. இந்த ஆவணங்கள் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட பின், அப்போது குடியரசுத் தலைவராக இருந்த பிரதிபா பாட்டீல் 18 மனுக்கள் மீது முடிவெடுத்தார். மீதமுள்ள எட்டு மனுக்களும் இப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முன் பரிசீலனையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு உள்பட மூன்று பேரின் கருணை மனுக்களும் அவரது பரிசீலனையில் உள்ளன. பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங்கைக் கொலை செய்த பல்வந்த் சிங் ரஜோனாவின் கருணை மனு மட்டும் உள்துறை அமைச்சகத்திடம் உள்ளது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
As many as 11 mercy petitions of death convicts are pending before President Pranab Mukherjee, an RTI reply has stated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X