For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா பேச்சால்தான் ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் கொன்றனர்: கருணாநிதி

By Siva
Google Oneindia Tamil News

Karunanidhi and Pranabh Mukherjee
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தப்பட்டது என்று அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதை நம்பியே உண்ணாவிரதத்தை கைவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்று சொல்வதற்கு மாறாக, திமுகவையும் என்னையும் (கருணாநிதி) திட்டுவதுதான் நோக்கம் என்ற அடிப்படையில் வார்த்தைகளைக் கொட்டியிருக்கின்றனர். இலங்கைத் தமிழர்களுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முற்றிலும் என் மீதான தாக்குதல்கள் தான்.

இலங்கையில் இனக் கலவரம் உச்சக் கட்டத்தில் இருந்தபோது மத்திய அரசை வலியுறுத்தவில்லை என்றும், அப்பாவி இலங்கைத் தமிழர்கள் அழிவுக்கு நான் தான் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று 2006ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவர் என்று இறுதி யுத்தம் நடைபெற்ற 2009ம் ஆண்டு ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். இப்படியெல்லாம் ஜெயலலிதா சொன்னதால்தான் இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் கொன்று குவித்தனர். எனவே, இலங்கைத் தமிழர்கள் அழிவுக்கு யார் காரணம் ஜெயலலிதாவா, நானா?

இறுதி யுத்தத்தின்போது நான் ஒன்றும் செய்யவில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்காக மனித சங்கிலி நடத்தினோம். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். சென்னையில் பேரணி நடத்தினோம். பந்த் நடத்தினோம். இதற்கெல்லாம் மேலாக 27.4.2009 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினேன். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை போர் நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டது என்று பொய்யான தகவலைக் கூறி நான் கைவிட்டதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஆனால், இலங்கையில் போர் நடவடிக்கைகள் முற்றுப்பெற்றுவிட்டன என்று அன்றைக்கு வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி அறிக்கை வெளியிட்டதன் பேரிலேயே உண்ணாவிரதத்தைக் கைவிட்டேன். மத்திய முக்கிய அமைச்சர் ஒருவரே இவ்வாறு அறிவித்த பிறகும் எப்படி நம்பாமல் இருக்க முடியும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK supremo Karunanidhi told he ended fast after the then external affairs minister Pranabh Mukherjee released a statement saying war in Sri Lanka came to an end.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X