For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு கைதியை எப்படித் தூக்கிலிடுவார்கள்?

Google Oneindia Tamil News

Hanging Rope
மும்பை: தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதியை தூக்கிலிடுவதற்கும் சில நடைமுறைகள் உள்ளன.

அதைப் பற்றிப் பார்ப்போம்...

- தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதியின் கழுத்து அளவு மற்றும் உடல் எடையை முதலில் கணக்கிடுவார்கள். எடை, கழுத்து அளவு மட்டுமல்லாமல், கைதியின் உயரமும் கணக்கிடப்படும்.

- இப்படி அளவிடும்போது குறிப்பாக கழுத்து அளவை அளக்கும்போது இடது காதுக்குக் கீழ் உள்ள தாடைப் பகுதியில் மிகத் துல்லியமாக அளவு கணக்கிடப்படும். காரணம், கழுத்து நெரிபடும்போது இடதுபக்கம்தான் கழுத்து எலும்பும், தாடையும் நொறுங்கும். இதனால்தான் தூக்கில் தொங்குவோர் கழுத்து இடதுபக்கமாக சாய்ந்தபடி இருக்கும்.

- மிகவும் அறிவியல்பூர்வமாக இந்த அளவுகளைக் கணக்கிடுவார்கள். அதன் பின்னர் தூக்குக் கயிறு வாங்கப்படும்.

- தூக்கிலிடும்போது கைதியின் ஆண் உறவினர்கள் 12 பேர் வரை நேரில்வந்து பார்வையிட அனுமதிக்கப்படும். இருப்பினும் பெரும்பாலும் யாரும் இதை நேரில் பார்க்க விரும்ப மாட்டார்கள். மேலும் கசாப்புக்கு இந்தியாவில் உறவினர்கள் யாரும் இல்லை என்பதால் யாரும் வரும் வாய்ப்பு இல்லை.

- தூக்கிலிட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டாலும் கூட உடனே உடலை இறக்கி விட மாட்டார்கள். தூக்கு மேடையிலேயே உடல் அரை மணி நேரத்திற்கும் மேலாக தொங்க விடப்படும். பின்னர் ஒரு டாக்டர் வந்து உயிர் பிரிந்து விட்டது என்பதை உறுதி செய்த பின்னரே உடல் இறக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். உறவினர்கள் யாரும் வராவிட்டால் அல்லது இல்லாவிட்டால் அரசு செலவிலேயே இறுதிச் சடங்குகள் நடத்தப்படும்.

English summary
Once a convict is sentenced to death, the prison staff has to first measure the neck and weight of the convict. It all boils down to height, weight and neck measurement with the height measured very accurately to the angle of the jaw immediately below his left ear. The height and weight are scientifically used to drop the rope to a certain height during the execution which is open to a dozen male relatives of the convict and other 'spectators' allowed by the jail superintendent. Kasab has no relatives in India.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X