For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த போப்பாண்டவர் பதவிக்கு முன்மொழியப்பட்டவர் காலமானார்

By Mathi
Google Oneindia Tamil News

வாட்டிகன்: கத்தோலிக்க மத சீர்திருத்தங்களை வெளிப்படையாக பேசிவந்தவரும் அடுத்த போப் ஆண்டவர் பதவிக்கு முன்மொழியப்பட்டவருமான கார்லோ மரியா மார்ட்டின் காலமானார்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த கர்தினால் கார்லோ மரியா மார்ட்டின் மிலன் நகரில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. அடுத்த போப் ஆண்டவரின் பதவிக்கு இவரது பெயர் முன் மொழியப்பட்டிருந்தது. கத்தோலிக்க சபைகளில் நிலவும் முறைகேடுகளுக்கு எதிராக கார்லோ மரியா மார்ட்டின் குரல் எழுப்பியிருந்தார்.

குறிப்பாக, தேவாலங்கள் பழமைவாதத்தில் இருந்து வெளியில் வரவே இல்லை. சடங்கு, சம்பிரதாயங்களிலும், நடை, உடை, தோரணையிலும் மட்டும்தான் பகட்டு தென்படுகின்றது என சாடியவர் மரியா மார்ட்டின். கத்தோலிக்க மக்களின் விவாகரத்து, மறுமணம் குறித்து முரண்பாடான கருத்துக்களை வெளியிட்ட மார்ட்டினி, காலமாற்றத்துக்கு ஏற்றவாறு கத்தோலிக்க சபையினரும் தங்களை புதுப்பித்துக் கொள்ளவேண்டும் என்பதை பகிரங்கமாக வலியுருத்தினார்.

காலமான கார்லோ மரியா மார்ட்டின் உடலுக்கு ஆயிரக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

English summary
Carlo Maria Martini, an Italian cardinal who was a rare liberal within the highly conservative Catholic Church hierarchy and who was considered a contender for the papacy in 2005, died Aug. 31. He was 85 and had Parkinson’s disease. His death was announced by the Milan Archdiocese, where he had served as archbishop.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X