For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விலை வீழ்ச்சி: பல்லாரியை விற்காமல் இருப்பு வைக்கும் விவசாயிகள்

Google Oneindia Tamil News

Onion
நெல்லை: நெல்லை பாவூர்சத்திரம் பகுதியில் போதிய விலை கிடைக்காததால் மூடை, மூடையாக பல்லாரி வெங்காயம் தேங்கிக் கிடக்கின்றது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் கீழப்பாவூர், மேலபட்டமுடையார், மேலப்பாவூர், நாகல்குளம், சென்னல், புதுகுளம், செட்டியூர், ஆவுடையனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் வழக்கம் போல் இந்தாண்டு பல்லாரிகள் பயிரி்ட்டனர். இப்பகுதியில் பருவமழை பொய்த்ததால் பல இடங்களில் பயிரிடப்பட்ட பல்லாரிகள் தண்ணீரின்றி கருகின. இதனால் விவசாயிகள் மீதமுள்ள பல்லாரிகளை காப்பாற்ற கிணற்று நீரைப் பாய்ச்சி வந்தனர். தற்போது அப்பகுதியில் பல்லாரி மகசூல் எடுக்கப்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் ஒரு கிலோ பல்லாரி ரூ.10க்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் நாட்கள் கடந்த நிலையில் தற்போது ரூ.7 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. குறைந்த விலைக்கு பல்லாரியைக் கொடு்த்தால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படும். விலை உயரும்போது விற்பனை செய்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம் என கருதி பெரும்பாலான விவசாயிகள் மகசூல் எடுத்த பல்லாரிகளை சாக்கு மூட்டைகளில் கட்டி இருப்பு வைத்துள்ளனர்.

English summary
Since Onion prices have gone down, farmers are not interested in sellling it now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X