• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸாரி, எங்க லெவலுக்கு உங்க அழகு இல்லை.. அழகியின் நியூட் ஆபரை நிராகரித்த பிளேபாய்!

|

Courtney Stodden
லாஸ் ஏஞ்சலெஸ்: பிளேபாய் பத்திரிக்கைக்கு நிர்வாணமாக போஸ் கொடுக்க விரும்புவதாக கூறிய 18 இளம் மாடல் அழகியின் கோரிக்கையை பிளேபாய் பத்திரிக்கை மறுத்து விட்டதாம். எங்களது இதழுக்கு போஸ் தரும் வகையில் நீங்கள் இல்லை என்று கூறி விட்டதாம் பிளேபாய்.

இப்படி நியூட் போஸ் தர ஆபர் கொடுத்த பெண்ணும் சாமானியப்பட்டவர் அல்ல. பெயர் கர்ட்னி ஸ்டோடன். 18 வயதாகிறது. இவர் 52 வயதான நடிகர் டோக் ஹட்சின்சனின் மனைவியும் ஆவார். அதாவது 16 வயதிலேயே ஹட்சின்சனை மணந்து விட்டார். இதற்கு இவரது அம்மாவான கிறிஸ்டாவும் பச்சைக் கொடி காட்டினார். இப்படித்தான் பிரபலமானார் கர்ட்னி.

இப்போது 18 வயதில் பூத்துக் குலுங்கும் இளமையுடன் திகழும் கர்ட்னி, நிர்வாணமாக போஸ் தர விரும்புவதாக பிளேபாய்க்கு கடிதம் போட்டார். ஆனால் அதை நிராகரித்து விட்டதாம் பிளேபாய்.

இத்தனைக்கும் பார்த்தவுடன் ஆச்சரியப்படும் வகையிலான அழகுடனும், செழிப்புடனும்தான் இருக்கிறார் கர்ட்னி. ஆனால் நாங்கள் எதிர்பார்க்கும் தரம் உங்களிடம் இல்லை என்று கர்ட்னிக்குப் பதிலளித்து அவரை டென்ஷனாக்கியுள்ளனராம்.

இத்தனைக்கும் ஆபாசப் படங்களில் நடிக்க மாட்டேன் என்று உடும்புப் பிடிவாதமாக இருப்பவர் கர்ட்னி. இருந்தாலும், பிளேபாய் போன்ற புகழ் பெற்ற பத்திரிக்கைக்காக நிர்வாண போஸ் தரத் தயார் என்று அறிவித்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்து நோஸ் கட் கொடுத்துள்ளது பிளேபாய் நிர்வாகம்.

இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இருப்பினும் கர்ட்னி தனது மார்பகத்தை செயற்கையான முறையில் பெருக்கியிருப்பதாக பிளேபாய் கருதுவதால்தான் அவரை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதை மறுக்கிறார் கர்ட்னி. எனக்கு இருப்பது ஒரிஜினல் மார்பகம்தான் என்றும் அவர் மார் தட்டிக் கூறுகிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
They've been dropping some pretty heavy handed hints, but today teen bride Courtney Stodden, and her mother Krista, got the brush off from Playboy magazine. The former beauty queen and wife of 52-year-old actor Doug Hutchinson, has reportedly been flooded with offers from porn producers after turning 18 last week.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more