For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவியை அபகரித்து விட்டார்... ஜெ. பேரவை பிரமுகர் மீது முத்துச்செல்வி எம்.எல்.ஏவின் கணவர் புகார்

சங்கரன்கோவில்: பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று 'அம்மா'வை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய சங்கரன்கோவில் அதிமுக எம்.எல்.ஏ முத்துச்செல்வி இன்று சர்ச்சை நாயகியாக மாறி வருகிறார். தனது மனைவியையும்

Google Oneindia Tamil News

Muthuselvi
சங்கரன்கோவில்: பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று 'அம்மா'வை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய சங்கரன்கோவில் அதிமுக எம்.எல்.ஏ முத்துச்செல்வி இன்று சர்ச்சை நாயகியாக மாறி வருகிறார். தனது மனைவியையும், குழந்தைகளையும் ஜெயலலிதா பேரவை பிரமுகர் அபகரித்துக் கொண்டதாக அவர் கட்சித் தலைமையிடம் புகார் கூறியுள்ளாராம்.

ஒரு நேரத்தில் அதிமுகவினர் மத்தியில் பெரும் சாதனையாளராகப் பார்க்கப்பட்ட முத்துச் செல்வியைச் சுற்றி இன்று நிறைய செய்திகள்...அதற்கான விடைகள்தான் தெரியவில்லை.

முத்துச்செல்வியின் கணவர் அதிமுக தலைமைக்கு ஒரு புகாரைத் தட்டி விட்டுள்ளார். அவரை வைத்து சில மாதங்களுக்கு முன்பு மறைமுகமாக இன்னொரு சர்ச்சையும் வந்தது. ஆனால் தற்போது புதிதாக எழுந்துள்ள இந்த இரண்டு சர்ச்சைகளாலும் முத்துச்செல்வியைச் சுற்றி கருமேகம் படர ஆரம்பித்துள்ளதாம்.

முத்துச் செல்வியின் கணவர் பெயர் முத்து மாரியப்பன். இவருக்கும், முத்துச்செல்விக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆரம்பத்திலிருந்தே பல்லடத்தில் வேலை பார்த்து வருகிறார் முத்துமாரியப்பன். சங்கரன்கோவில் நகராட்சித் தலைவராக முன்பு இருந்த முத்துச் செல்வி, அதற்கு முன்புவரை தனது கணவருடன்தான் வசித்து வந்தார்.

நகராட்சித் தலைவரான பின்னர் அவர் மட்டும் சங்கரன்கோவிலுக்கு இடம் பெயர்ந்து வந்தார். முத்துமாரியப்பன் தொடர்ந்து பல்லடத்திலேயே இருந்து வந்தார்.

இப்போது எம்.எல்.ஏவாக மாறிய பின்னர் முத்துச் செல்விக்கும், முத்து மாரியப்பனுக்கும் இடையே இடைவெளி அதிகமாகி விட்டதாம். இந்த நிலையில்தான் பகீர் புகார் ஒன்றை அதிமுக தலைமையிடம் கொண்டு சென்றுள்ளார் முத்து மாரியப்பன்.

அதாவது, என் மனைவி முத்துச்செல்வியையும் என் குழந்தைகளையும் என்னிடமிருந்து அப்துல் கனி பிரித்துவிட்டார் என்று புகார் கூறியுள்ளார் முத்துமாரியப்பன்.

அப்துல் கனி என்பவர் மறைந்த முன்னாள் அமைச்சரும், சங்கரன்கோவில் தொகுதியில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வந்தவருமான கருப்பசாமியிடம் பி.ஏவாக இருந்தவர். இன்று ஜெயலலிதா பேரவையில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். இவரை நோக்கித்தான் தனது குற்றச்சாட்டை வைத்துள்ளார் முத்து மாரியப்பன்.

''என்னை சிக்கலில் மாட்ட விடப் பார்க்கிறார்கள்...''

இந்தப் புகார் குறித்து அப்துல் கனி கூறுகையில், என்னைத் தேவையில்லாமல் சிக்கலில் மாட்டி விடப் பார்க்கிறார்கள். நான் யார் விஷயத்திலும் குறுக்கிடவில்லை. முத்துமாரியப்பன் புகாரில் உண்மை இல்லை என்று கூறுகிறார்.

அம்மா என்ன முடிவு எடுக்கப் போகிறாரோ... சங்கரன்கோவில் வாசிகளின் ஒரே கவலை இதுதான்...

English summary
A new controversy is haunting Sankarankovil ADMK MLA Muthuselvi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X